சிறார்களைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை நடைமுறைப்படுத்தவுள்ளது.
இதற்கமைய, சிறுவர்கள் மற்றும் ஆரம்ப வயதுவந்தோர் பருவத்தில் உள்ளவர்கள் சம்பந்தபட்ட பணிகளின் பின்னணி குறித்து சோதனையிடுவதற்கான புதிய சட்டமூலமொன்று அதிகார சபையினால் முன்மொழியப்பட்டு, அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான அமைச்சரவை அனுமதியினைப் பெறும் பொருட்டு, சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சரினால் அமைச்சரவைக்கு அமைச்சரவைப் பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அதிகார சபை குறிப்பிடுகிறது.
சிறுவர்களை தன்னார்வு பணிகள் முதல் ஏனைய பணிகளில் அமர்த்துவதற்கு முன்னர் இப்பணிகளின் பின்னணி தொடர்பில் பணியில் அமர்த்துவோர் அதிகாரசபைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
இவற்றைப் பரிசோதிப்பதற்காகவும் பணிகள் என்ற பெயரில் இளம் சிறார்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தி அவர்களைப் பாதுகாக்க இப்புதிய சட்டம் வழிவகுக்கும் என அதிகார சபை நம்புகிறது.
மேலும், இப்புதிய சட்டத்திற்கான அமைச்சரவை அனுமதி கிடைப்பபெற்றதும் அவற்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்டுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிடுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

0 comments:
Post a Comment