• Latest News

    November 05, 2014

    பொன்சேகா வெளிநாடு செல்ல இருந்த தடை நீக்கம்

    முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா, வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருந்த தடை, தற்காலிகமாகத் தளர்த்தப்பட்டுள்ளது.

    இதற்கமைய, நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருந்த பொன்சேகாவின் கடவுச்சீட்டு, 100,000 ரூபாய் பிணை முறியின் அடிப்படையில் அவரிடம் ஒப்படைப்பதற்கு கொழும்பு உயர்நீதிமன்ற நீதியரசர் தேவிகா தென்னகோன் உத்தரவிட்டார்.

    பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக ஏற்பட்டுள்ள நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக, பொன்சேகா சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளதாகவும் அதற்கு நீதிமன்ற அனுமதி வேண்டுமென்றும் அவரது சட்டத்தரணியினால் உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதியரசர், பொன்சேகா வெளிநாடு செல்வதற்கான அனுமதியை வழங்கியதோடு அவரது கடவுச்சீட்டை ஒப்படைக்கவும் உத்தரவிட்டார்.

    இதற்கமைய, எதிர்வரும் 20ஆம் திகதி வரை, சிங்கப்பூரில் சிகிச்சை பெறுவதற்கு பொன்சேகாவுக்கு அனுமதி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: பொன்சேகா வெளிநாடு செல்ல இருந்த தடை நீக்கம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top