• Latest News

    December 05, 2014

    மைத்திரிபாலவை ஆதரித்து 140 பிரதான கூட்டங்கள், 12 ஆயிரம் சிறிய சந்திப்புக்கள்

    பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன
    எதிர்க் கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை, ஆதரித்து 140 பிரதான கூட்டங்கள் நடத்தப்படவுள்ளன.

    இதில்  முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பிரதான கூட்டங்களில் பங்கேற்று உரையாற்றவுள்ளனர். 

    கிராமிய மட்டங்களில் 12 ஆயிரம் சிறிய கூட்டங்களை நடத்துவதற்கும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் பிரதான கூட்டங்கள் இடம்பெறவுள்ளன. 

    ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடிபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் பொதுவேட்பாளரின் முதலாவது பிரசாரக் கூட்டம் கடந்த 30 ஆம் திகதி பொலனறுவையில் இடம்பெற்றது.

    இந்நிலையில், வடமத்திய மாகாணத்தை குறிவைத்து மகிந்த ராஜபக்சவின் முதலாவது பிரசாரக் கூட்டமும் எதிர்வரும் 11 ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெறவுள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மைத்திரிபாலவை ஆதரித்து 140 பிரதான கூட்டங்கள், 12 ஆயிரம் சிறிய சந்திப்புக்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top