எஸ்.அஷ்ரப்கான்: தமிழ் பேசும் சமூகங்களுக்கு உரிய பாதுகாப்பும் சகல உரிமைகளும் வழங்கும் அரசுக்கே எமது ஆதரவு என்று முஸ்லிம் லிபரல் கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.எல்.றியாஸ் கருத்து வெளியிட்டார்.ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் லிபரல் கட்சியின் நிலைப்பாடு தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதுவிடயமாக தொடரந்தும் அவர் குறிப்பிடும்போது,
'இந்த நாட்டை மாறி மாறி ஆட்சி செய்த அரசுகள் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரத்தையோ அல்லது பாதுகாப்பையோ சரிவர வழங்கியிருந்தால் இன்றுவரை இலங்கையில் இனப்பாகுபாடுகளோ இனப்பிரச்சினைகளோ கொண்ட அரசியல் கலாச்சாரம் தோன்றியிருக்காது. என்றும் இந்நாட்டில் முஸ்லீம்களும் மற்றும் தமிழ் பேசும் மக்களும் நிம்மதியாகவும் மதச்சுதந்திரத்துடனும் வாழ எவர் உத்தரவாதம் வழங்குவார்களோ அவ்வாறான ஆட்சிமுறைக்கு எமது ஆதரவு என்றும் உண்டு.
'30 வருட யுத்த சூனியத்தில் எமது நாடு மூழ்கியிருந்தபோது இரு பிரதான கட்சிகளும் மாறிமாறி ஆட்சிசெய்து வந்தன. ஆனால்,அவர்களால் இந்த நாட்டில் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்ததா? ஏன் அவர்களால் முடியாது போனது? அதற்குகாரணம் எல்லாரும் அரசியல் இலாபநோக்குடனும் பெரும்பான்மைமக்களின் நலனில் அக்கரைகொண்டுசெயல்பட்டதுமேயாகும். ஆனாலும் தற்போதைய அரசுதன் உயிரையும் துச்சமாகக் கொண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளனர். அது மட்டுமல்ல பல அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுத்துவருவதை எம்மால் மறுக்க முடியாது. ஆனாலும், இவ்வரசில் பலகுறைபாடுகள் காணப்படுகின்றன. அதை சுமுகமான முறையில் பேசித் தீர்வைக்காணும் சந்தர்ப்பம் இன்னும் எம்மைவிட்டு போக வில்லை'
அத்துடன், நாட்டைப் பாதுகாத்து அனைத்து இனமக்களையும் ஒன்றினைத்துஓர் நல்லாட்சியைஅமைக்கக்கூடிய வல்லமைதற்போதைய அரசுக்கு உண்டா? இல்லையா? என்பதனை நாங்கள் ஆழமாகச் சிந்தித்தால் விளங்கிக் கொள்ளமுடியும். ஆகவே ஆட்சியைமாற்றுவதா? அல்லது ஆட்சியை சீரமைப்பதா? என்ற பொறுப்பு மக்களையே சாரும் என்பதால் மக்கள் மிகவும் நிதானமான முடிவை விரைவில் வெளிப்படுத்துவார்கள். என்று தனது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்
0 comments:
Post a Comment