ஏ.அப்துல்லாஹ்: இராணுவ
சதிப்புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட ஜனாதிபதி முர்ஷிக்கு ஆதரவாகவும்
இராணுவ சதிப் புரட்சிக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் செய்து வந்த முர்ஷி
ஆதரவலர்களை மீது சிஸியின் இராணுவம் தாக்குதல் நடாத்தி நூற்றுக் கணக்கானோர் கொன்றது
,ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டனர் இவர்களில்
நுற்றுக் கணக்கானோருக்கு கட்டம் கட்டமாக மரண தண்டனை விதிக்கப்பட்டு
வருகிறது . அதில் ஒரு பகுதியாக நேற்று 188 முர்ஷி ஆதரவாளர்களுக்கு மரண
தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
எகிப்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு
கெய்ரோவுக்கு அருகில் கெர்தசா கிராமத்தில் பொலிஸ் நிலையத்தின் மீது
தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் இந்த 188 முர்ஷி ஆதரவாளர்களுக்கு மரண
தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டோரில் 140 க்கும்
அதிகமானவர்கள் ஏற்கனவே தடுப்புக்காவலில் இருப்பதோடு எஞ்சியவர்கள்
தலைமறைவாகியுள்ளனர் .. அதே தினத்தில் மின்யா பகுதியில் இருக்கும் மற்றுமொரு
பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடாத்தியதாக தெரிவித்து ஏற்கனவே 500
க்கும் அதிகமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இது வரை எகிப்தின் இராணுவ நிர்வாகம்
ஆயிரத்திற்கும் அதிகமான முர்ஷி ஆதரவாளர்களுக்கு மரண தண்டனை விதித்துள்ளது.
விதிக்கப்பட்டிருக்கும் புதிய தண்டனை எகிப்து தலைமை முப்தியின் ஆலோசனைக்கு
விடப்பட்டுள்ளது. இது குறித்த இறுதித் தீர்ப்பு ஜனவரி 24 ஆம் திகதி
வழங்கப்படவுள்ளது.
இஹ்வான் அமைப்பின் சிரேஷ்ட உறுப்பினரான
முர்சி இராணுவச் சதிப் புரட்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட பின்னர் நாட்டை
கைப்பற்றிய இராணுவத் தளபதியான அப்துல் பத்தாஹ் அல் சிஸி
இஸ்லாமியவாதிகளுக்கு எதிராக கடுமையான ஒடுக்குமுறையை கையாண்டு வருகிறார்.
அதேவேளை சிஸியின் நிர்வாகம் 2011 மக்கள்
எழுச்சி மூலம் பதவி கவிழ்க்கப்பட்ட எகிப்தின் முன்னாள் சர்வதிகாரி ஹுஸ்னி
முபாரக்கை அவர் மீதான ,கொலை ,ஊழல் , மோசடி குற்றச்சாட்டுக்களில் இருந்து
தனது நீதிமன்றம் மூலம் விடுவித்துள்ளது.
சிஸி நிர்வாகம் இஹ்வான்களை அடக்கி
ஒடுக்கும் நோக்கில் அதன் முக்கிய தலைவர்கள் , உறுப்பினர்கள் , ஆதரவாளர்கள்
மீது போலியான குற்றசாட்டுகளை சும்மதி அவர்களை ஒடுக்கி வருவதாக
தெரிவிக்கப்படுகிறது.LM

0 comments:
Post a Comment