அபூ-இன்ஷப்:
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வளமான இல்லம் 'இசுருமத் நிவச' வேலைத்திட்டத்தின் கீழ் திவிநெகும பயனாளிக் குடும்பங்களுக்காக வழங்கப்பட்ட கொடுப்பனவின் இரண்டாம் கட்ட 2500 கொடுப்பனவை உரிய பயனாளிக் குடும்பங்களுக்கு இம்மாதம் டிசம்பர் 25ம் திகதி தொடக்கம் 30ம் திகதிக்குள் வழங்குமாறு பொருளாதார அபிவிருத்தி அமைச்சு திவிநெகும திணைக்கத்தமினூடாக வலயக்காரியாலயம் மற்றும் மவாட்ட திவிநெகும காரியாலயங்களுக்கு உத்தரவு பிரப்பித்துள்ளதாக அம்பாறை மாவட்ட திவிநெகும பிரதிப் பணிப்பாளர் ஐ.அலியார் இன்று (18) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வளமான இல்லம் 'இசுருமத் நிவச' வெலைத்திட்டத்தின் கீழ் திவிநெகும குடும்பங்களுக்கு அவர்களின் இல்லங்களை திருத்திக் கொள்ள 10ஆயிரம் வழங்கவுள்ளதாகவும் அவற்றில் முதல் கட்ட கொடுப்பனவு வாழ்வின் எழுச்சி திவிநெகும சமுதாய அடிப்படை வங்கி மூலம் 2500 வழங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் இரண்டாம் கட்டம் உடனடியாக வழங்கப்படவுள்ளதாகவம் தெரிவித்த அவர் மூன்றாம் கட்டமாக 5000 விரைவில் வழங்கப்படவுள்ளதாகவும அலியார்; தெரிவித்தார்.

0 comments:
Post a Comment