• Latest News

    December 17, 2014

    75 வீதமான போரை நான் முடித்தேன்! அதற்காக காகம் போல் கரையவில்லை!!- சந்திரிக்கா

    பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பிரசார நடவடிக்கைளில் தாம் மீண்டும் ஈடுபடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

    தமது இல்லத்தி;ல் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர் இரண்டு வாரங்கள் சுகவீனம் காரணமாகவே பிரசாரங்களில் தாம் ஈடுபடவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

    விடுதலைப் புலிகளுடனான போரில் 75 வீதத்தை தாம் ஆட்சியில் இருந்த போது நிறைவு செய்து விட்டதாக குறிப்பிட்ட அவர், அந்த நேரத்தில் விடுதலைப் புலிகளின் வசம இருந்த பெரும்பாலான இடங்கள் கைப்பற்றப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

    தமது ஆட்சியின் போது 1995ம் ஆண்டு யாழ்ப்பாணம் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் அவர் கூறினார்.

    எனினும் அதனை வைத்துக் கொண்டு தாம் காகம் போல கரைந்து கொண்டிக்கவில்லை என்றும் சந்திரிக்கா தெரிவித்தார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: 75 வீதமான போரை நான் முடித்தேன்! அதற்காக காகம் போல் கரையவில்லை!!- சந்திரிக்கா Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top