• Latest News

    December 04, 2014

    இரவற் சீலையை நம்பி இடுப்புக்கந்­தையை எறி­வது மிகவும் துர­திர்ஷ்­ட­மான விட­யமே!

    ஏ.எச். சித்தீக் காரி­யப்பர்-
    முஸ்லிம் அர­சியல் கட்­சிகள் தேசிய அர­சியல் ரீதி­யாக ஏதா­வ­தொரு தீர்­மா­னத்தை எடுக்க வேண்­டு­மா­னாலும் அவர்கள் கூடி பேசித்தான் முடிவு செய்ய வேண்­டு­மென்ற தேவை இப்­போது இல்லை. அவர்­களின் அவ்வா­றான எந்த முடி­வு­க­ளையும் மக்கள் சிர­மேற்று நடக்கப் போவதும் இல்லை என்­பது இன்­றைய கள நிலை­மை­களின் தெளி­வாகும்.
    அர­சியல் விவ­கா­ரங்கள் தொடர்பில் முஸ்லிம் மக்கள் தாங்­க­ளாக எத­னையும் தீர்­மா­னித்தால் அதன்­ப­டியே அவர்கள் செயற்­படும் நிலைதான் இன்று காணப்­ப­டு­கி­றது. உங்கள் தீர்­மா­னத்­தின்­படி நாங்கள் நடக்கத் தயாரில்லை. நாங்கள் சொல்­வது போன்று நீங்கள் நடந்து கொள்­ளுங்கள் என்றும் கூறு­ம­ள­வுக்கு முஸ்லிம் மக்கள் அர­சியல் விஷ­யத்தில் அத்­து­ப­டி­யாகி விட்­டனர்.
    மக்­களின் எண்­ணங்கள், அபி­லா­ஷை­களின் அடிப்­ப­டை­யி­லான தீர்­மா­னங்கள் மட்­டுமே இன்று சபை­யேறும். அதற்­காக மக்­களின் அபி­லா­ஷை­க­ளின்­ப­டியே எதிர்­கா­லத்தில் நாம் தீர்­மா­னங்­களை எடுப்போம் என்று கூறு­வதும் குப்­புற வீழ்ந்­தவன் தனது மீசையில் மண் ஒட்­ட­வில்லை என்று கூறு­வ­தற்கே ஒப்­பா­னது.
    இந்த நாட்டு முஸ்­லிம்­களின் பிர­தான கட்சி என்று கூறப்­ப­டு­வது முஸ்லிம் காங்­கி­ரஸ்தான். அமைச்சர் ரிஷாத்தின் அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ், அமைச்சர் அதா­வுல்­லாஹ்வின் தேசிய காங்­கிரஸ் என்­பவை அடுத்த கட்­டமே. இந்த மூன்று கட்­சி­க­ளிலும் இரண்­டா­வ­தாகப் பேசப்­ப­டு­வது அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸ்தான்.
    அமைச்சர் அதா­வுல்­லாஹ்வின் தேசிய காங்­கி­ரஸின் அர­சியல் நிலைப்­பாடு என்­ன­வென்­பது மக்­க­ளுக்கு எப்­போதும் தெரிந்­ததால் அந்தக் கட்சி பெரி­தாகப் பேசப்­ப­டு­வதும் இல்லை. பிரச்­சி­னை­க­ளுக்குள் சிக்கி பிரஸ்­தா­பிக்­கப்­படும் ஒரு கட்­சி­யா­கவும் இல்லை.
    எனவே, இன்று முஸ்லிம் அர­சி­யலில் பேசப்­படும் இரு கட்­சி­க­ளான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ் ஆகி­ய­வற்றின் பக்­கமே முஸ்­லிம்­க­ளது மட்­டு­மல்ல அர­சி­னதும் பார்­வையும் திரும்­பி­யுள்­ளது. ஜனா­திபதி தேர்­தலில் இவர்­களின் நிலை என்ன என்ற கேள்­விக்கு இந்த இரு கட்­சி­களில் ஒரு கட்­சி­யேனும் இது­வரை விடை­ய­ளிக்­க­வில்லை. அனைத்தும் கேள்­விக்­கு­றி­யா­கவே உள்­ளன.
    ஜனா­தி­பதித் தேர்தல் தொடர்பில் பர­ப­ரப்­பாகப் பேசப்­பட்ட காலத்­திலும் அதற்­கான உத்­தி­யோ­க­பூர்வ அறி­விப்பு வெளி­யி­டப்­பட்ட தினத்தின் பின்­ன­ரு­மான இன்றை வரையும் இந்த இரு கட்­சி­களும் தங்­க­ளுக்குள் இது குறித்து ஆரா­யா­மலும் இருக்­க­வில்லை. நிறை­யவே கூடிக் கூடி பேசி­யுள்­ளனர். ஆனால், இன்னும் நாம் தீர்­மானம் எடுக்­க­வில்லை என்­ப­தா­கவே அறிக்கை வரு­கி­றது.
    ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தங்­க­ளுக்குள் எத்­த­னையோ கூட்­டங்­களை நடத்தி விட்­டன. அந்தக் கட்­சியை உல­மாக்கள் மற்றும் புத்தி ஜீவி­களும் சந்­தித்து மக்­களின் உணர்­வு­களை அவர்­க­ளிடம் விளக்­கி­யுள்­ளனர். ஆனால், அவர்­களால் எந்த தீர்­மா­னத்­துக்கும் வர முடி­யாத ஒரு நிலை­மையே காணப்­ப­டு­கி­றது. சில வேளை­களில் தங்­க­ளது கோவை­களும் (பைல்­களும்) ஜனா­தி­ப­தி­யி­ட­மி­ருந்தால் நிலைமை சிக்­க­லாகி விடும் என்ற அச்­சமோ தெரி­யாது.
    ஜனா­தி­பதி தேர்தல் தொடர்பில் முஸ்லிம் காங்­கிரஸ் தங்­க­ளுக்­குள்­ளாக பல கூட்­டங்­களை நடத்திக் கொண்­டி­ருக்கும் அதே­வேளை, அதே கட்­சியைச் சேர்ந்த சிலர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டனும் (ஐக்­கிய தேசியக் கட்சி) கலந்­து­ரை­யா­டி­யுள்­ள­த­னையும் இன்னும் சிலர் இன்­றைய ஆட்­சி­யா­ளர்­களின் உயர்­மட்ட வட்­டா­ரங்­க­ளுடன் நெருங்­கிய தொடர்­பினை பேணி வரு­வ­த­னையும் எவ­ராலும் மறைக்க முடி­யாது.
    எனவே, கட்­சிக்குள் இரு­வே­று­பட்ட கருத்­துக்கள் நில­வு­வதும் ஒரு தீர்க்­க­மான முடி­வினை கட்­சியின் தலை­மை­யினால் மேற்­கொள்­வ­தற்குச் சிர­ம­மா­கவும் இருக்­கலாம். எந்த முடி­வினை எடுத்­தாலும் ஒரு பக்கம் பாதிப்­புத்தான் என்­ப­தனை அந்தக் கட்­சியின் தலைமை உண­ராமல் இல்லை.
    அதா­வது, நிழலில் ஒதுங்கப் போன­வனின் தலையில் காகம் எச்சம் போட்ட மாதி­ரியும் காக்கா இல்­லாத மரம் பார்த்து தென்னை மரத்தின் நிழலில் ஒதுங்­கி­ய­வனின் தலையில் தேங் காய் வீழ்ந்­தது போன்­ற­து­மா­கவே இந்த விடயம் உள்­ளது. எனவே, முஸ்லிம் காங்­கிரஸ் என்­பது இன்று இரு­பக்க கூர் ­கொண்ட கத்­தியில் நடப்­பது போன்­ற­து தான். ஆனால், அந்தக் கத்தி வெளியில் இல்லை என்­ப­த­னையும் மீண்டும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
    அண்­மையில் ஐக்­கிய தேசியக் கட்­சி யின் முக்­கி­யஸ்­தர்கள் சிலரைச்  சந்­தித்த  முஸ்லிம் காங்­கி­ரஸை சேர்ந்த  ஓரி­ரு வர், முஸ்லிம் காங்­கி­ரஸின் முக்­கி­யஸ்­தர்­களின் ஒட்­டு­மொத்த ஆத­ர­வையும் தங்­களால் பெற்றுத் தர முடி­யு­மென்றும் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­பதித் தேர்­தலில் ஆத­ரிக்கத்  தயா­ரென்றும் தெரி­வித்­துள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.
    அது­போன்று இந்த அர­சாங்­கத்தின் சிரே ஷ்ட அமைச்­சர்கள் சிலரை நாடா­ளு­மன்ற கட்­டட தொகு­திக்குள் இர­க­சி­ய­மாகச் சந்­தித்த முஸ்லிம் காங்­கி­ரஸின் முக்­கி­யஸ்­தர்­களில் மேலும் ஓரி­ருவர்  அந்தக் கட்­சியின் அரசியல் பீட உறுப்­பி­னர்­களை தம்­பக்கம் ஈர்க்க முடி­யு­மென்றும் அதற்­கான மட்­டக்­க­ளப்பு மாந்­தி­ரீகம் தன்­னிடம் உள்­ள­தா­க வும் கூறி­யுள்­ள­தாகத் தெரிய வரு­கி­றது. இதுதான் இன்­றைய நிலை. இப்­ப­டிப்­பட்ட நிலையில் எப்­ப­டித்தான் கட்சித் தலை­மையால் முடி­வெ­டுக்க முடியும்?
    மக்கள் அபி­லா­ஷை­க­ளுக்கு இடம்­கொ­டுப்­பதா அல்­லது கட்சி முக்­கி­யஸ்­தர் கள் சிலரின் தனிப்­பட்ட நலன்­களைக் கொண் ட அவா­வுக்கு இயைந்து போவதா என்ற ஓர் இக்­கட்­டான நிலைமை கட்சி தலை­மையை கடு­மை­யான தலை­யி­டிக்கு உள்­ளாக்­கி­யுள்­ளது.
    இதே­வேளை, அமைச்சர் ரிஷாத் பதி­யு ­தீனின் அகில இலங்கை மக்கள் காங்­கி­ர ­ஸுக்குள் ஒரு­மித்த கருத்து நில­வு­வ­தா­க வும் முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்குள் காண ப்­படும் முரண்­பா­டுகள் பிரச்­சி­னைகள் போன்று அந்தக் கட்­சிக்குள் எதுவும் இல்­லை­யென்றும் கடந்த வாரம் குறிப் பிடப்பட்டது எண்ணி ஏழு நாட்­களும் போக­வில்லை அந்தக் கட்­சிக்­குள்ளும் பாரிய பிளவு ஏற்­பட்டு விட்­டது.
    அவ­ரது கட்­சியைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஹுனைஸ் பாரூக் மின்­னாமல் முழங்­காமல் ஐக்­கிய தேசியக் கட்சிப் பக்கம் பாய்ந்து விட்டார். ஆனால், முஸ் லிம் காங்­கி­ரஸை சேர்ந்த எந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் இவ்­வாறு கட்சி மாற­வில்லை. அவர்­க­ளது கட்­சிக்குள் எவ்­வ­ள­வுதான் முரண்­பா­டுகள் காணப்­பட்­டாலும் இந்த நிலை இது­வரை எழ­வில்லை.
    ஹுனைஸ் பாரூக் அகில இலங்கை மக் கள் காங்­கி­ரஸை விட்டு ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு மாறி­யமை அந்தக் கட்­சியை மட்­டு­மல்ல. வன்னி முஸ்லிம் மக்­க­ளையும் அர­சியல் ரீதி­யாக இன்று பல­மி­ழக்கச் செய்­துள்­ள­துடன் பாரிய ஏமாற்­றத்­தையும் கொடுத்­துள்­ளது.
    தனது தலை­மை­யிலும் தான் சார்ந்த இன்­றைய அர­சாங்­கத்­திலும் அதி­ருப்­திப்­பட்டுக் கொண்டு இன்று ஐக்­கிய தேசியக் கட்­சியில் அவர் சேர்ந்­துள் ளார். ஆனால், அந்தக் கட்சி மூலம் அவர் ஏதேனும் சாதித்துக் கொள்ள முடி­யுமா என்­பது கேள்­விக்­கு­றிதான். இருப்­பினும் இவரால் ஐக்­கிய தேசியக் கட்சி ஏதோ ஒன்றைச் சாதித்துக் கொள்ளும் என்­பதில் ஐய­மில்லை
    ஹுனைஸ் பாரூக் அடுத்த தேர்­தலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சார்பில் வன்­னியில் போட்­டி­யிட்டு வெற்­றி­ய­டைவாரா அல்­லது தோல்­வி­ய­டை­வாரா என்ற விட­ யங்­க­ளுக்கு மேலாக அங்கு வாழும் குறைந்த எண்ணிக்­கை­யான முஸ்­லிம்­க ளின் வாக்­குகள் சின்னா பின்­னப்­பட்டு அந்த மாவட்­டத்தில் முஸ்­லிம்­களின் பிர­தி ­நி­தித்­து­வமே இல்­லாமல் போய்­வி­டலாம் என்­பது கள­நிலைச் சாத்­தி­ர­மாகும். இத னால், அந்த மக்களின் நிலைமை இன்­றை­யதை விடவும் மிக மோச­மா­கியும் விடலாம்.
    சமூ­கத்தில் உயர்ந்த நிலையில் உள்ள எவ­ரா­யினும் சின்னச் சின்ன விட­யங்­க­ளு க்­காக அல்­லது தற்­கா­லிக நன்­மை­க­ளுக்­காக முரண்­பட்டு பிரிந்து நிற்­ப­தனால் ஏற் படும் விளைவுகள் விகாரமானவை. ஒரு சமூகத்தையே இதற்காக விலை கொடுக்க வேண்டிவரும்.
    பேரினவாத, பெரும்பான்மை இன அர சியல் கட்சிகளின் சதுரங்கத்தில் இன்று சிறு பான்மை இனத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் வெறும் காய்களாகவே நகர் த்தப்படுகிறனர். இவ்வாறான நிலைமை கள்  ஏற்படுவது துரதிர்ஷட மானது.
    இப்படிப்பட்ட நிகழ்வுகள் இன்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்குள் எழுந்துள்ளமையால் அந்தக் கட்சியும்  அரசியல் ரீதியாக தூரப்படுத்தப்படும் என் பதே உண்மை. சிங்கள அரசுகளுடன் சிறுபான்மைக் கட்சிகள்  பேரம் பேசும் நிலைமை மாறி நாங்களே அவற்றிடம்  சோரம் போகும் தன்மை தோன்றியுள்மை வேதனையான விடயம்தான். அத்துடன் இரவற் சீலையை நம்பி இடுப்புக் கந் தையை எறிவது மிகவும் துரதிர்ஷ்டமா னது. 
    நன்றி,
    நாட்டுநடப்பு
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இரவற் சீலையை நம்பி இடுப்புக்கந்­தையை எறி­வது மிகவும் துர­திர்ஷ்­ட­மான விட­யமே! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top