![]() |
| ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா |
2010ம் ஆண்டுத் தேர்தலில் தான் தனியாக சரளைக் கற்களில் பயணம் செய்ததாகவும்,
தற்போது மைத்திரிபால சிறிசேன பலருடன் இணைந்து அதிவேகமாக பயணிப்பதாகவும்
முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத்
பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.
இன்று புறக்கோட்டையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்சி எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபாலி சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக பொன்சேகா இதன்போது அறிவித்தார்.
ஆட்சியாளரை வௌியேற்றி நாட்டை மீண்டும் ஜனநாயக நீரோட்டத்தில் இணைப்பதே, மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவளிப்பதாக இறுதித் தீர்மானம் எடுத்ததன் பிரதான நோக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2010ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாட்சிக்கு எதிரான மிலிட்டரி ஜெனரலாக எழுந்த தான், 2015ம் ஆண்டு தேர்தலில் செகரற்றி ஜெனரலாக எழுந்துள்ளதாகவும், எதிர்வரும் காலங்களில் ஜெனரல் பப்ளிக்காக எழவேண்டியது கட்டாயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(அத தெரண தமிழ்)

0 comments:
Post a Comment