அஷ்ரப் ஏ சமத்: இம்முறை
மிக சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை பிரதி அமைச்சர் பைசர் முஸ்தபா
தட்டிச்செல்வதை எவராலும் தடுக்க முடியாது என ஐக்கிய தேசிய கட்சி மேல்
மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான பைருஸ் ஹாஜியார்
குறிப்பிட்டார். நேற்று கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் நடந்த மைத்ரிக்கு
ஆதரவு திரட்ட நடாத்தப்பட்ட தேர்தல் பிரசார மேடையில் இவர் இதனை
தெரிவித்தார்.
அனுர
பண்டாரானாயக்க எவ்வாறு தோற்கும் பக்கம் போய் சேர்ந்துகொள்வாரோ அதேபோன்று
பிரதி அமைச்சர் பைசர் எப்போதும் வெல்லும் பக்கம் போய் சேர்ந்து
கொள்பவர்.தற்போது மைத்ரியின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் எப்படியாவது
வெற்றியின் பக்கம் சேர்ந்துகொள்ளவேண்டும் என்பதில் ஆவலாக உள்ளார் பிரதி
அமைச்சர் பைசர் .
கடந்த
காலங்களில் பள்ளிகள் உடைக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்துகொண்டிருந்த
பிரதி அமைச்சர் பைசர் ,அளுத்கம பேருவளை கலவரங்களின் போது சட்டத்தை செய்ய
அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்காத பிரதி அமைச்சர் பைசர் யாரின் தேவைக்காக
பொதுபல சேனா தொடர்பாக சந்தேகம் எழுப்புகிறார் என ஐக்கிய தேசிய கட்சி மேல்
மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான பைருஸ் ஹாஜியார்
கேள்வி எழுப்பினார்.
அரசாங்கத்தின்
பின்புலத்தில் பொதுபல சேனா இயங்குவதை நீருபிக்க ஆயிரம் சான்றுகள் உள்ளன
.இன்று ஆறாம் வகுப்பு படிக்கும் பிள்ளைக்கு தெரியும் பொதுபல சேனாவின்
வரலாறு வழக்கறிஞரான பிரதி அமைச்சருக்கு இது தெரியாமல் போனது மஹிந்த
அரசாங்கம் எப்போதும் குறிப்பிடும் ஆசியாவின் ஆச்சர்யம் என ஐக்கிய தேசிய
கட்சி மேல் மாகாண சபை உறுப்பினரும் மத்திய கொழும்பு அமைப்பாளருமான பைருஸ்
ஹாஜியார் குறிப்பிட்டார்.

0 comments:
Post a Comment