கொடூரமான
ஆட்சியாளர்கள் நரகத்திற்கு செல்வார்கள் என முன்னாள் இராணுவத் தளபதியும்
ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பலப்பிட்டிய கொஸ்கொட பிரதேசத்தில் இன்று
நடைபெற்ற பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவான தேர்தல்
பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கொடூர ஆட்சியாளர்களால், நரகத்தின் ஆட்சியாளரான எமனும் தனது பதவியை இழக்க நேரிடும்.
இந்த ஆட்சியாளர்கள் நரகத்திற்கு சென்று குருதியை அருந்துவது
மாத்திரமல்ல, நரகத்தின் நிரந்தர ராஜாவாக மாறுவார்கள் எனவும் சரத் பொன்சேகா
குறிப்பிட்டுள்ளார்.TW-







0 comments:
Post a Comment