• Latest News

    December 17, 2014

    முஸ்லிம்களை அம்பாறைக்கும், தமிழர்களை யாழுக்கும் அனுப்பவுள்ளதாக கூறுகின்றனர்: மகிந்த

    கொழும்பில் இருந்து வெளியேற்றி முஸ்லிம் மக்களை அம்பாறைக்கும், தமிழ் மக்களை யாழ்ப்பாணத்திற்கும் அனுப்பவுள்ளதாக கூறுகின்றனர் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

    கொழும்பு பாமன்கடை பகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

    அவர் மேலும் குறிப்பிடுகையில்,

    மயூரா பிளேஸில் நாம் மாடிக்குடியிருப்புகளை நிர்மாணித்தோம். அங்குள்ளவர்களை அங்கிருந்து தூர இடங்களுக்கு அனுப்பி வைக்கவில்லை.

    ஏற்கனவே வசிக்கும் இடங்களிலேயெ அவர்களை அமர்த்தினோம் என்பதனை நான் தெளிவாக கூறுகிறேன். ஆனால் தற்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு கதைகளை கூறுகின்றனர்.

    கொழும்பில் இருந்து வெளியேற்றி அவிஸ்ஸாவளைக்கும் முஸ்லிம் மக்களை அம்பாறைக்கும், தமிழ் மக்களை யாழ்ப்பாணத்திற்கும் அனுப்பவுள்ளதாக கூறுகின்றனர்.

    சேரி வீடுகளை அகற்றும் எமது செயற்பாட்டினை நிறுத்த வேண்டாம். எனது காலப்பகுதியில் சேரி வீடுகளுக்கு பதிலாக மக்கள் சிறப்பான குடியிருப்புகளிலேயே வாழ வேண்டுமௌ

    இங்கு காணப்படும் அழகான சூழல் புதிய கட்டடங்களின் நிர்மாணத்தின் மூலம் மேலும் மாற்றமடையலாம்.

    நாடு முன்னேற்றமடையும் போதும், அபிவிருத்தி அடையும் போதும், சமூகம் முன்னேற்றமடையும் போதும் அதற்கு ஏற்றவாறு ஏனையவர்களும் தயாராக இருக்க வேண்டும்.

    உங்களது பிள்ளைகளுக்கும் உங்களுக்கும் சுபீட்சமான எதிர்காலத்தையும் சிறந்த சூழலையும் உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பாதுகாப்பான இலங்கையை கட்டியெழுப்ப எட்டாம் திகதி உங்களது கடமையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    இதேவேளை, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் சிலரை கொழும்பில் நேற்று சந்தித்தபோது ஜனாதிபதி இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

    நீதித்துறையின் சுயாதீனத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தலையிடவில்லை.

    தற்போதைய அரசாங்கம் நாட்டின் சட்டத்தை பாதுகாப்பதற்கு முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

    அரசாங்கம் நீதித்துறையில் தலையிடுவதாக ஒருசிலர் பொய் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.

    சட்டத்தை அனைவருக்கும் சமமான முறையில் நடைமுறைப்படுத்தி சமாதானத்தை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம்களை அம்பாறைக்கும், தமிழர்களை யாழுக்கும் அனுப்பவுள்ளதாக கூறுகின்றனர்: மகிந்த Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top