• Latest News

    December 17, 2014

    இன்னும் சில தினங்களில் எனது அதிரடி அறிவிப்பு வெளியாகும்: பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ்

    கல்முனை தொகுதி முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினராகிய தமக்கு எதிராக பல சதி முயற்சிகள் நடைபெறுகின்றன. இன்னும் சில தினங்களில் எனது அதிரடி அறிவிப்பு வெளியாகும்.

    இவ்வாறு மு.காவின் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

    முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து சிலரும், வெளியிலிருந்து பலருமாக இந்த சதி முயற்சிகளை அரங்கேற்றுகின்றனர்.

    முழு முஸ்லிம் சமூகத்தின் நலனை கருத்திற் கொண்டும், அம்பாறை குறிப்பாக கல்முனைத் தொகுதி மக்களின் நலன்களை அடிப்படையாக கொண்டும் தமது தீர்மானங்களை அமையும்.  தான் மௌத்தாகாமல் இருந்தால் இன்னும் சில தினங்களில் எனது அதிரடி அறிவிப்பு வெளியாகும்.

    என்னை இணையத்தளங்களில் அரசசார்பு நிலையில் உள்ளவனாகக் காட்டுவதற்கு பல செய்திகளை .இன்று திரிபுபடுத்தி வெளியிட்டுள்ளனர். இந்த விடயத்தில் எந்தவித உண்மைத்தண்மையும் இல்லை.
     
    மக்களின் உணர்வுகளை மதித்து அதன்பால் செயற்பட்டு வருகின்ற ஒருவன் என்ற வகையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பதற்;கு முன்பிருந்தே நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அனைத்துக் ;கூட்டங்களிலும் அன்று முதல் இன்று வரை ஒரே நிலைப்பாடான மக்களின் உணர்வோடு மதிப்பளிக்கும் நிலைப்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றேன்.
     
    மக்கள் இன்று எதனை எதிர்பார்க்கின்றார்களோ அதற்காக கட்சிக் கூட்டங்களில் வலியுறுத்திக் கூறியுள்ளேன்.

    இன்றுகூட தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்தபோது நாம் என்ன முடிவுகளை எடுக்கவேண்டும் என்பதனை வலியுறுத்தியுள்ளேன். என்மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள் இணையத்தளங்களைப் பயன்படுத்தி எனக்கெதிராக சேறுபூசுவதற்கு முனைந்துள்ளனர்.
     
    இன்னும் இரண்டு மூன்று தினங்களில் கட்சி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக மக்களின் உணர்வோடு முடிவுகளை எடுப்பதற்கு அந்த முடிவை எடுக்கின்ற நிலைப்பாட்டுக்கு போராடுகின்ற ஒருவனாக நான் இருப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு எனது நிலைப்பாட்டை மக்கள் அப்போது அறிந்து கொள்வார்கள்.
     
    மேலும் இன்று இணையத்தளங்களில் வந்த சூழ்ச்சிகளை இன்னும் ஒரிரு நாட்களில் இலத்திரணியல் மற்றும் இணையத்தள ஊடகங்கள் ஊடாக தெளிவுபடுத்தவுள்ளேன்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: இன்னும் சில தினங்களில் எனது அதிரடி அறிவிப்பு வெளியாகும்: பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top