• Latest News

    December 17, 2014

    முஸ்லிம் சமூகம் தவறுகளை ஜனாதிபதித் தேர்தலிலும் விட்டுவிடக் கூடாது:

    அபூ-இன்ஷப்:
    இந்த நாட்டிலே வாழுகின்ற பெரும்பான்மை சமூகம் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியினை மூன்றாவது தடவையும் ஜனாதிபதியாக ஆக்குவதற்று அணிதிரண்டுள்ளனர் இந்த நிலையில் சிறுபான்மைச் சமூகம் எமதும் எமது சிறார்களினதும் எதிகாலம் தொடர்பாகவும் நிதானமாக சிந்தித்து செயற்பட வேண்டும் என சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளரும் சிறிலங்க சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் ஐக்கய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சம்மாந்துறைப் பிரதேச தேர்தல் இணைப்பாளருமான ஏ.எம்.எம்.நௌஷhட் தெரிவித்தார்.

    எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ அவர்களை ஆதரித்து மக்கள் மத்தியில் பிரச்சாரப்பணியினை ஆரம்பிக்கும் நோக்குடன் நேற்று (16) மாலை 8.00 மணியளவில் சம்மாந்துறை ஜனாதிபதி கலாசார விளையாட்டு கட்டிடத் தொகுதியில சிறிலங்கா சுதந்திரக்கட்சி  பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் முக்கயஸ்தர்கள் மத்தியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
    :
    அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், முஸ்லிம் சமூகம் தொடர்சியாக விட்டு வருகின்ற தவறுகளை இந்த ஜனாதிபதித் தேர்தலிலும் விட்டுவிடக் கூடாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த முறை தேர்தலில் அதிகப்படியான வாக்குகளால் வெற்றி பெறுவார் அவற்றில் எந்த சந்தேகமம் கொள்ள தேவையில்லை. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்று முஸ்லீம்கள் தோக்கடிக்கப்படுவது என்பது இன்றைய கால அரசியல் நீரோட்டத்தில் பொருத்தமற்ற முடிவாகவே நோக்கப்படுகின்றன தொடர்சியாக நாம் தவரிழைக்க கூடாது.

    இந்த தேர்தலில் சிறுபான்மை சமூகம் நமது பிரதேச அபிவிருத்தியையும், இளைஞர்களின் வளமான எதிர்காலத்தினையும் கருத்திற் கொண்டு இந்த நாட்டின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஆதரித்து வெற்றியின் பங்குதாரர்களாக மாறவேண்டும் அற்பத்தனமான குறுகிய அரசியல் நோக்கம் கொண்ட சில அரசியல் தலைமைகளின் முடிவுகளினால் நாம் எமது தன்மானத்தையும் சுயகௌரவத்தையும் இழந்து விடக்கூடாது முஸ்லீம்கள் சந்தர்ப்பவாதிகள் நாட்டை நேசிக்காதவர்கள் என்ற பெரும்பான்மையினரின் மனக் கிளேசத்துக்கு ஆளாகிவிடக் கூடாது.

    நாம் அனைவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் எனவம் கேட்டுக் கொண்டார்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முஸ்லிம் சமூகம் தவறுகளை ஜனாதிபதித் தேர்தலிலும் விட்டுவிடக் கூடாது: Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top