அபூ-இன்ஷப்:
மக்களை வழி நடாத்துகின்ற மக்களுக்காக பணியாற்றுகின்ற அதிகாரிகள் அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற செயற் திட்டங்களை சரியான முறையில் பொதுமக்களுக்கு தெளிவு படுத்தப் படாமையினால் இன்று எமது பிரதேச பொதுமக்கள் தளம்பல் நிலையில் இருக்கின்றனர் என சம்மாந்துறைப் பிரதேச சபையின் தவிசாளரும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.எம்.நௌஷட் தெரிவித்தார்.
புதன்கிழமை மாலை சம்மாந்துறை ஜனாதிபதி கலாசார விளையாட்டுக் கட்டிடத் தொகுதியில் நடைபெற்ற திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடையேயான சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இங்கு தொடர்சியாக உரையாற்றுகையில் இந்த அரசாங்கம் சமுர்த்தி என்ற நாமத்தோடு ஆரம்பித்து இன்று திவிநெகுமவாக அதாவது வாழ்வின் எழுச்சி என்ற திணைக்களத்தினை ஆரம்பித்து இந்த நாட்டிலே வாழுகின்ற வருமானம் குறைந்த மக்களுக்கு அளப்பரிய அதாவது எந்தவொரு அரசாங்கமும் முன்னெடுக்காத வகையில் பாரிய அபிவிருத்தியினையும் வாழ்வாதார அபிவிருத்திகளையும் முன்னெடுத்துள்ளமை நாம் யாரும் இலகுவாக மறந்துவிட முடியாது.
அதுமாத்திரமன்றி இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்திலும் கூடுதலான பாரிய அளவிலான அபிவிருத்திகளும், வாழ்வாதார முன்னெடுப்புக்களும் முன்வைக்கப்பட்டு அது அமூல் படுத்தப்பட்டவருகின்ற நிலையில் மக்கள் சகலவற்றையும் பெற்றுக் கொண்டு எமது தமிழ் மற்றும் முஸ்லீம் பிரதேச மக்கள் நன்றியுணர்வற்ற வகையில் செயற்படுவது எந்தவொரு மனிதராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
நாமும் நமது பிரதேச மக்களும் கடந்த 30 ஆண்டுகள் அனுபவித்த துன்பியல்களை சம்பவங்களை வரலாற்றில் ஒருபொதும் நாம் மறந்து விடமுடியாது அவ்வாறான நிலையில் எமது மக்களுக்கு கை கொடுத்தவர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி ஆவார்.
அவருடைய வெற்றி உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் எமது மக்கள் வித்தியாசமான ஒரு கோணத்தில் சிந்திப்பது கவலையாகும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் பார்வையில் நாம் அதாவது தமிழ் முஸ்லீம் மக்கள் தமக்கு ஆதரவு வழங்குவதில்லை என்ற பாரிய குறைகாணப்படுகின்றது.
இந்த விடயம் அவருக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை இந்த நாட்டை ஆட்சி செய்கின்றவர் என்ற வகையில் எமக்கும் எமது சமூகத்துக்கும் எதிர்காலத்தில் பாரிய சவாலாக அமைந்து விடக் கூடாது என்பதற்காகவே நாம் பொறுப்புணர்சியுடன் நடந்து கொள்ள வேண்டியுள்ளது.
அந்த வகையில் பொதுமக்களுடன் பணியாற்றுகின்ற உங்கள் மத்தியில் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான விளக்கங்களை எற்றி வைக்க கடமைப்பட்டுள்ளேன் எனவே நீங்கள் பொறுப்புணர்சியுடன் செயற்படுவீர்கள் எனவும் நான் எதிர்பாhக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச திவிநெகும அதிகாரி எம்.பீ.எம்.ஹூசைன், திவிநெகும முகாமையாளர்களான ஏ.எல்.ஏ.ஹமீட், யூ.கே.றஹ்மத்துல்லா எட்பட பலர் கலந்து கொண்டனர்.



0 comments:
Post a Comment