அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் முன்னாள் இணைப்புச் செயலாளரும், கடந்த
அக்கரைப்பற்று மாநகரசபைத் தேர்தலில் தேசிய காங்கிரசில் போட்டியிட்டவருமான
எம்.ஐ.ஏ.ஆர்.புஹாரி மற்றும் அவரின் தலைமையிலான தேசிய காங்கிரஸ்
ஆதரவாளர்கள், அக்கரையூர் அப்துல் குத்தூஸ், ஜனாப் மௌறூப் ஆசிரியர்,மற்றும்
பலர் இன்று 14ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர்.
இந் நிகழ்வு முன்னாள் இணைப்புச் செயலாளர் புஹாரி அவர்களின்
அக்கரைப்பற்று இல்லத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் ஐக்கிய தேசியக்
கட்சியின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய
அமைப்பாளருமான திரு.தயாகமகே கலந்து கொண்டார்.
அத்துடன் அம்பாரை வீதியில் உள்ள வை.எம்.சீ.ஏ. மண்டபத்திலும் மற்றுமொரு
குழுவினரும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்டுள்ளனர். முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பி.மஜீட், ஐக்கிய தேசியக் கட்சியின் கிழக்கு
மாகாணசபை உறுப்பினரும், ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளருமான
திரு.தயாகமகே ஆகியோருடன் மற்றும் பலரும் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும்
பொது வேட்பாளர் மைத்திரிபாலவுக்கு ஆதரவு வழங்கவுள்ளார்கள்.







0 comments:
Post a Comment