மட்டக்களப்பு மங்களராமய விகாரையின் விகாராதிபதி சுமணரட்ண தேரர் தலைமையிலான குழுவினரே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
பேரணியாக வந்த ஆர்ப்பாட்டக் குழுவினரை கூட்டம் நடைபெறும் மைதானத்துக்குள் செல்ல முடியாத வகையில் மைதானத்தின் பிரதான வாயிலை பாதுகாப்புப் படையினர் இழுத்து மூடினர்.
புழுக்குணாவ மற்றும் வெவுளியாமடு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதியிடம் கையளிக்கச் செல்கிறோம் என விகாராதிபதி அங்கிருந்த பாதுகாப்புப் படையினரிடம் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை படையினர் மைதானத்துக்கு உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
விகாராதிபதியை உள்ளே செல்ல முடியாமல் தடுத்த பாதுகாப்புப் படையினர், ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ள மகஜரை தங்களிடம் வழங்குமாறு கோரி மகஜரைப் பெற்றுக்கொண்டனர்.
அதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதியை மறித்து தங்களுடைய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்ததுடன் இதற்கிடையில் விகாராதிபதிக்கும் பொலிஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் ஏற்பட்டது.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் தடியடிப் பிரயோகம் மேற்கொண்டனர் இதனால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது.
TW-
0 comments:
Post a Comment