• Latest News

    December 05, 2014

    அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் பெருக்கம்!

    அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் பெருக்கம் அதிகரித்துக்காணப்படுகின்றது இதனால்  பெரும்பாலான ஆறுகளில் முதலைகளின் நடமாட்டம் அதிகரித்துக்காணப்படுகின்றது.

     இப்பிரதேசத்தில் உள்ள  விவசாயிகள், கால்நடைகள் என்பன ஆறுகளை சுதந்திரமாக பாவிக்கமுடியாத ஒரு நிலை காணப்பட்டு வருகின்றது.

    அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதான ஆறுகளில் ஒன்றான மாவடிப்பள்ளி ஆற்றில் பெருந்தொகையான முதலைகளின் நடமாட்டத்தை சாதாரணமாக காணக்கூடியதாக உள்ளது.

    இவ் ஆறு பிரதான வீதிக்கரிகில் இருப்பதால் இந்த ஆற்றை பொதுமக்கள் தமது
    தேவைகளுக்காக பாவித்துவருகின்றனர் குறிப்பாக தூரப்பிரதேசத்தில் இருந்து வருபவர்கள் கூட குளிப்பதற்காக இவ் ஆற்றினை பயன்படுத்துகின்றனர் இருந்தாலும் மிகுந்த அச்சத்துடனேயே இவ் ஆற்றில் நீராடுகின்றனர்.

    இதேவேளை இவ் ஆற்றில் விலங்குளின் கழிவுகள் கொட்டப்படுவதால் அவற்றை உண்பதற்காக  ஆற்றங்கரையை நோக்கி படையெடுத்து வருகின்றது இச்செயலும்  இவ் ஆற்றில் முதலை வரக்காரனாமாக உள்ளது என இப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

    முதலைகள் உள்ள இடம் என அடையாளப்படுத்தும் வகையில் எதுவித அறிவித்தல் பலகையும் இவ் ஆற்றங்கரையில்  இல்லாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும் பல மனித உயிர்களை பலி கொடுக்கமுன்  சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுப்பாவ்ர்களா?



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அம்பாறை மாவட்டத்தில் முதலைகளின் பெருக்கம்! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top