• Latest News

    December 05, 2014

    ஹுனைஸ் எம்.பி,மின்னல்,ரங்கா,அமைச்சர் றிசாட்...!!

    அமைச்சர் றிசாட் பதியூர்தீன் பொத்திப் பொத்தி வளர்த்து வந்த புறா தன் தாயாகத்தை விட்டு பறந்து சென்று எதிரணிக் கூட்டில் சேர்ந்துள்ள விடயம் அமைச்சர் றிசாட் பதியூர்தீனின் கட்சிக்கு பலத்த அவமானத்தை தேடிக் கொடுத்துள்ளது என்றே கூற வேண்டும்.

    இவர் ஏன் மாறினார்?என்ற வினாவிற்கான விடையினை  யூகங்களால் யூகிக்க முடியாத ஒரு நிலையில் உள்ள போதும் அரசியல் வாதிகளின் மனோ நிலைகள் அரசுக்கு மாற்றமாக உள்ள போதும் மாறத் தயங்கும் முஸ்லிம் அரசியல் வாதிகளிடையே எதிரணியில் துணிவோடு முதல் முதல்  இணைந்ததால் முஸ்லிம் மக்களின் பலத்த வரவேற்பை இவர் தன் வசப் படுத்தியுள்ளார்.அரசுடன் இவர் ஏன் முரண்பட்டார்?என்பதனை அறிய மின்னல் ரங்கா பல முறை ஏன் மூன்று மாவட்டத்திற்கு தலைமை தாங்கும் அமைச்சர் ஒரு மாவட்டத் தலமையினைக் கூட உங்களுக்கு வழங்க வில்லை போன்ற வேக்காட்டைக் கிளப்பும் கேள்விகளினை   பல கோணங்களில் விடுத்து விடுத்து தொடுத்த போதும் தான் மக்களுக்காகவே விலகியதாக பதில் கூறிய இவர் ஒரு இடத்தில் கூட அமைச்சர்  ரிசாட்டினை குறை கூறும் வண்ணம் தன் பேச்சினை அமைக்காது இஸ்லாமிய ரீதியில் தன் பேச்சினை கொண்டு சென்றமை ஒரு முஸ்லிம் அரசியல் வாதியின் பண்பினை தொட்டுச் சென்றுள்ளார்.

    கடந்த வாரம் நடைபெற்ற மின்னலில் நடந்த சில முக்கிய குறிப்புகள்:
    •    மின்னல் ரங்கா அ.இ.ம.கா இற்கு விவாத அழைப்பினை விடுத்திருந்தார்.இதனை அ.இ.மா.கா ஏற்குமா?

    •    இந் நேரத்தில் வன்னி பகுதியில் மின் துண்டிக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.ஏன் துண்டிக்கப் பட்டது?இதனை செய்தோர் யார்?இது திட்டமிடப் பட்டு செய்திருக்க அதீத வாய்ப்பு உள்ளது.எதிரணியில் இருந்து கொண்டு ஹுனைஸ் எம்.பி இனால் தன் பிரபலத்திற்கு செய்திருக்க வாய்ப்பு குறைவு.


    •    அமைச்சர் றிசாட் இனுடைய கட்சி ரங்காவிற்கு தெரியாது ஹுனைஸ் எம்.பி இடம் அக் கட்சியின் பெயரினைக் கேட்டு அ.இ.ம.கா இனை அவமானப் படுத்தினார் என்றே கூற வேண்டும்.

    •    ஹுனைஸ் எம்.பி தான் பின் புலங்களை விளக்கி தனது பின் புலத்தைக் கேட்ட பிரதேச தவிசாளர் எஹியாக் கானிடம் அவரின் பின் புலத்திள் ஓ.எல் தகமையாவது இருக்கின்றதா?எனக் கேள்வி எழுப்பி இருந்தார் இதற்கு பதில் கிடைக்குமா?


    •    ஏன் அரசு அமைச்சர் றிசாட் இற்கு இவ்வளவு மரியாதை வழங்குகிறது?என கேள்வி எழுப்பியிருந்தார் ரங்கா.இதற்கு பதில் கிடைக்குமா?

    •    மூன்று மாவட்டங்களுக்கு தலைமை தாங்கும் அமைச்சர் ஹுனைஸ் எம்.பி இற்கு ஒரு மாவட்ட தலைமைத்துவத்தைக் கூடக் கொடுக்க வில்லை.

    •    தான் அரசின் பக்கம் மாறப் போவது,நாமல் ராஜ பக்ஸ பொது வேட்பாளரை ஆதரிக்க உள்ளார் என்ற கருத்துகள் தன் மீது புனையப் பட்டவை என்பதனை தெளிவாக்கினார்.

    அரசியல் விஞ்ஞாபனங்களை வெளியிடப்பட்ட பின் மாற்றுவது சாத்தியமற்றது.எனவே,குறித்த கட்சிக்குள் இருந்து கொண்டு தான் தமக்கான தீர்வை பெற முடியும் என்ற என்ற ரங்காவின் நகைப்புக் கூற்றிற்கு பதில்.

    ஒரு கட்சி தேர்தல் விஞ்ஞாபனங்களை  வெளியிட்ட பின் அதனை மாற்றம் செய்வது சாத்திய மற்ற ஒன்று என்பது உண்மை.வெளியிட முன் யார்?யார்? எல்லாம் நடு நிலைமையில் இருந்து கொண்டு தேர்தல் விஞ்ஞாபனங்களைக் பார்த்து தங்கள் ஆதரவை வழங்க உள்ளார்களோ!அவர்களினது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் ஒரு கட்சி கேட்டு தங்கள் தேர்தல் விஞ்ஞாபனங்களை அமைக்கலாம்.மேலும்,அமைத்த பிறகு வெளியில் நிற்பவர்களையும் உள் வாங்க இதில் நீங்கள் உடன் பாடா? என வினவலாம்.அதன் பிறகு மாற்றியமைக்கலாம் வெளியிடலாமல்லவா? இதற்கு குறித்த கட்சியின் பங்காளியாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

    துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
    சம்மாந்துறை
    இலங்கை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஹுனைஸ் எம்.பி,மின்னல்,ரங்கா,அமைச்சர் றிசாட்...!! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top