நேற்றையதினம் தனியார்
தொலைக்காட்சியில் ஔிபரப்பான அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
விளையாட்டுத்துறை அமைச்சர் அமைச்சர்
மஹிந்தானந்த அளுத்கமகே நிகழ்ச்சியின் இடையில்
தனக்கு அவமரியாதை ஏற்பட்டதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இரவு 10.00 மணி அளவில் ஔிபரப்பப்பட்ட இந்த நேரடி நிகழ்ச்சியில் தான்
கலந்து கொண்டதாகவும், இதன்போது தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்ட ஒருவர்
தனக்கு அவமரியாதை ஏற்படுத்தும் வகையில் பேசியதாகவும் அவர் தனது
முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நள்ளிரவு 12.00 மணியளவில் மிரிஹான பொலிஸ் நிலையம் சென்ற அமைச்சர்
மஹிந்தானந்த அளுத்கமகே, இவ்வாறு முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளதாக
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும் தொலைபேசியில் பேசிய குறித்த நபர் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளுமாறும் அவருக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடர எதிர்பார்த்துள்ளதாகவும், அமைச்சரின் முறைப்பாட்டில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கையெழுத்திட்ட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. (ஆ)

0 comments:
Post a Comment