• Latest News

    December 04, 2014

    மஹிந்தவின் சுவரொட்டிகளை அகற்றுங்கள்! கொழும்பு மேயருக்கு சட்டத்தரணிகள் கடிதம்

    கொழும்பு மாநகரசபை பிரதேசத்தில் ஒட்டப்பட்டுள்ள தேர்தல் சுவரொட்டிகளை அகற்ற வேண்டும் என்று கோரி இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், கொழும்பு மாநகர முதல்வருக்கு சட்டக்கடிதத்தை அனுப்பியுள்ளது.

    மாநகர முதல்வர் ஏ.ஜே.எம் முஸம்மிலுக்கு இந்தக்கடிதம் நேற்று அனுப்பபட்டுள்ளது.

    இந்த கோரிக்கையை நிறைவேற்ற தயங்கினால் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

    குறித்த கோரிக்கை சட்டக்கடிதத்தில், கொழும்பு மாநகரசபை பிரதேசத்தில் மஹிந்த ராஜபக்சவின் 1800 சட்டவிரோத சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டமையானது 2006 ஜனவரி முதலாம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிரான செயல் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.


    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மஹிந்தவின் சுவரொட்டிகளை அகற்றுங்கள்! கொழும்பு மேயருக்கு சட்டத்தரணிகள் கடிதம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top