• Latest News

    December 19, 2014

    மகிந்தவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யாது அமைதிகாக்கும் அமைச்சர்கள்


    ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக 19 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களே இம்முறை தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது.

    66 பேரை கொண்ட அமைச்சரவையில், 5 பேர் விலகி மைத்திரிபால சிறிசேனவுக்காக நேரடியாக தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மீதமுள்ள 61 அமைச்சரவை அமைச்சர்களில் 42 பேர் அமைதியாக இருந்து வருகின்றனர்.

    அமைச்சர்களான மேர்வின் சில்வா, ஏ.எச்.எம்.பௌசி, டியூ. குணசேகர, சீ.பி. ரத்நாயக்க, லக்ஷ்மன் செனவிரத்ன, ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, பீலிக்ஸ் பெரேரா, பீ. தயாரத்ன, சுமேதா ஜி. ஜயசேன, திஸ்ஸ கரலியத்த, சாலிந்த திஸாநாயக்க அமைதியாக இருக்கும் அமைச்சர்களில் முன்னணியில் இருக்கும் அமைச்சர்களாவர்.

    அமைச்சர்கள் பசில் ராஜபக்ஷவும் தினேஷ் குணவர்தனவும் இவர்களுடன் புதிதாக இணைந்து கொண்டுள்ளனர்.

    இரண்டு திட்ட அமைச்சர்கள் மற்றும் 38 பிரதியமைச்சர்களில் 7 பேர் மாத்திரமே மகிந்த ராஜபக்ஷவுக்கு நேரடியாக ஆதரவை வழங்கி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்களில் பெருந் தெருக்கள் மற்றும் துறைமுக திட்ட அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன வெளிப்படையாக தெரியும் வகையில் மகிந்தவுக்கான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார்.

    மகிந்த அணியில் இருக்கும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போது அமைதியாக இருந்து வருகின்றனர்.

    தமது தேர்தல் பிரசாரத்தில் அரசாங்கத்திற்கு வெளியிலும் அரசாங்கத்திற்குள்ளும் செயற்பாடுகள் இருப்பதாக மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.

    மகிந்த அணியில் இருக்கும் அமைச்சர்கள் தற்போது வெளிப்படையாக விமர்சனங்களை முன்வைத்து வருவதுடன் அவை மகிந்த ராஜபக்ஷவுக்கு பாதகமானதாக இருப்பதை காணமுடிகிறது.

    ஏனையவர்கள் அமைதியாக இருப்பதால், மைத்திரிபால சிறிசேனவுக்கு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
    TW -
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மகிந்தவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யாது அமைதிகாக்கும் அமைச்சர்கள் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top