• Latest News

    December 25, 2014

    எனக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு: ரிசாத்

    தனக்கு ஏதாவது ஆபத்துக்கள் ஏற்படுமாயின் அதற்கு அரசாங்கம் பொறுப்புக் கூற வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாத் பதியூதீன் தெரிவித்தார்.

    இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    அவர் மேலும் குறிப்பிடுகையில்,

    நான் அரசாங்கத்திலிருந்து வெளியேறத் தீர்மானித்த தினத்தன்று, எனக்கு அரசாங்கத்தின் உயர் அதிகாரி ஒருவரிடமிருந்து ஓர் அனாமதேய தொலைபேசி அழைப்பு வந்தது.

    அரசாங்கத்திலிருந்து விலகினால் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டி வரும் என அந்த தொலைபேசி அழைப்பின் போது எனக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

    அந்த தொலைபேசியின் இலக்கம் மற்றும் அது தொடர்பான தகவல்கள் என்னிடம் உள்ளன எனவும் ரிசாத் பதியூதீன் குறிப்பிட்டார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: எனக்கு ஏதாவது நடந்தால் அரசாங்கமே பொறுப்பு: ரிசாத் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top