ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமை தொடர்ந்தும் அரசாங்கத்துடன் வைத்திருப்பதில் அரசாங்கம் தற்காலிக வெற்றியை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹக்கீம், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து ஒருநாள் கழிந்த நிலையில் அமைச்சர் பசில் ராஜபக்ச உட்பட்ட முக்கிய உறுப்பினர்கள் ஹக்கீமை சந்தித்துள்ளனர்.
இதில் ஜனாதிபதியின் ஆலோசகரும் ஹக்கீமின் நண்பருமான ஒருவரும் உள்ளடங்கியிருந்தார்.
குறித்த பேச்சுவார்த்தையின் பின்னர், ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமது நிலைப்பாட்டில் மென்மைப் போக்கை கடைப்பிடிக்க ஹக்கீம் இணங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே தம்முடனான பேச்சுவார்த்தையின்போது தம்புள்ளை பள்ளிவாசல் விடயம் உட்பட்ட சர்ச்சைக்குரிய விடயங்களை உரியமுறையில் தீர்ப்பதாக ஜனாதிபதி ஹக்கீமிடம் உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாட்டை ரவூப் ஹக்கீம் எதிர்வரும் 27ம் திகதியன்று வெளியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

0 comments:
Post a Comment