ஜாதிக ஹெல உறுமயவில் இருந்து விலகி மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட உதய கம்மன்பில, ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் மேல் மாகாண முதலமைச்சராக நியமிக்கப்பட உள்ளதாக அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேல் மாகாண முதலமைச்சராக பதவி வகித்து வரும் பிரசன்ன ரணதுங்க, அந்த பதவியை ராஜினாமா செய்து விட்டு, பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட உள்ளார்.
தேர்தலில் வெற்றி பெற்றால் அவரை அமைச்சராக நியமிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது என அரசாங்கத்தின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தில் இருந்து விலகியதை அடுத்து மேல் மாகாண சபையில் அமைச்சராக பதவி வகித்து வந்த உதய கம்மன்பிலவும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்கியமைக்கான அன்பளிப்பாக அவருக்கு இந்த முதலமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக பேசப்படுகிறது.
TW-

0 comments:
Post a Comment