ஜே.வி.பியின் தொழிற்சங்கமாக தேசிய தொழிற்சங்க மத்திய நிலையம் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் யோசனைகளை முன்வைக்க உள்ளது.
ஊழியர்களின் மாத சம்பளத்தை 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிப்பது உட்பட சில விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த யோசனைகள் முன்வைக்கப்பட உள்ளதாக தொழிற்சங்க மத்திய நிலையத்தின் தலைவரான மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
வாழ்க்கை செலவு புள்ளி அதிகரிக்கும் போது அதற்கு அமையாக சம்பளம் அதிகரிக்கப்படக் கூடிய புதிய சட்ட்தை உருவாக்க வேண்டும். இதன் மூலம் அரசாங்க ஊழியர்களின் வாழ்க்கை செலவு பிரச்சினைக்கு உண்மையான தீர்வு கிடைக்கும்.
நாட்டின் இன்றைய அரசாங்கத்தினால் உழைக்கும் மக்களுக்கு போதுமான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.
வேறு ஒரு ஆட்சியாளர்களின் கீழ் இந்த நிவாரணங்களை பெற வேண்டுமானாலும் பாரிய அழுத்தங்களை கொடுப்பது அவசியமானது எனவும் லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
TW-

0 comments:
Post a Comment