• Latest News

    December 14, 2014

    தொடரும் கட்சித் தாவல்கள்…!!!

    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருவர், எதிர்கட்சியின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்குவதற்குத் தீர்மானித்துள்ளனர்.

    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சிலாபம் நகர சபை உறுப்பினரான ஜீவனி காரியவசம் மற்றும் வென்னப்புவை பிரதேச சபை உறுப்பினரான ஷிரோன் பெர்னாண்டோ ஆகியோரே மைத்ரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.

    எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதிசெய்வதற்காக வென்னப்புவை பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற பொதுக்கூட்டங்களின்போது இந்த இரண்டு உறுப்பினர்களும் இணைந்துள்ளனர்.

    கடந்த வடமேல் மாகாண சபைத் தேர்தலில் தயாசிறி ஜயசேகரவுடன் இணைந்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைத்த, பண்டுவஸ்நுவர பிரதேச சபையின் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் சுனில் திசாநாயக்க நேற்று மீண்டும் எதிர்கட்சியுடன் இணைந்துகொண்டார்.

    பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதிசெய்வதற்காக ஹெட்டிபொல நகரில் நேற்று மாலை நடைபெற்ற கூட்டத்தின்போதே அவர் மீண்டும் எதிர்கட்சியுடன் இணைந்துகொண்டார்.

    இதேவேளை, திம்புலாகல பிரதேச சபையின் எதிர்கட்சித்த தலைவர் ஏ.ஆர். ரஞ்சித் கஹகல்ல, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளார்.

    ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொலன்னறுவை மாவட்ட தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இணைந்துகொண்டிருந்தார்.

    சூரியவெவ பிரதேச சபையின் எதிர்கட்சித் தலைவர் சந்திம ரத்நாயக்கவும் தனது ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக நேற்று தெரிவித்திருந்தார்.

    (நன்றி நியூஸ் பெஸ்ட்)
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தொடரும் கட்சித் தாவல்கள்…!!! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top