• Latest News

    December 14, 2014

    ஐ.தே.கவின் தேசிய பட்டியல் எம்.பியாக ஹஸன்அலியை நியமிக்கவும்: அம்பாரை மாவட்ட ஆதரவாளர்கள் பகிரங்க வேண்டுகோள்.

    இப்னு செய்யத்: ஐ.தே.க தேசிய பட்டியல் மூலமாக ஒரு முஸ்லிமை பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க வேண்டுமாக இருந்தால், சம்மாந்துறை தொகுதியின் ஐ.தே.கவின் அமைப்பாளர் எம்.ஏ.ஹஸன்அலிக்கு வழங்க வேண்டுமென்று ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் பலரும் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரசிங்காவுக்கு பகிரங்க வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்கள்.

    ஐ.தே.கவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கா ஆளுந்தரப்புக்கு மாறியுள்ள நிலையில், அந்த வெற்றிடத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சேகு இஸ்ஸதீனை நியமிக்க வேண்டுமென்று சிலர் முன் வைத்துக் கொண்டிருக்கும் கருத்தினை அடுத்தே இக்கோரிக்கையை அம்பாரை மாவட்ட ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் பலரும் ஹஸன்அலியை தேசிய பட்டியலில் நியமிக்க வேண்டுமென்று கேட்டுள்ளனர்.

    எம்.ஏ.ஹஸன்அலி நீண்ட காலமாக கட்சியின் உயர்ச்சியின் போதும், வீழ்ச்சியின் போதும் கட்சி மாறாது இருந்து கொண்டிருக்கின்றார். அம்பாரை மாவட்டத்தில் ஐ.தே.கவின் சார்பில் பல தேர்தல்களில் போட்டியிட்டவராகவும் உள்ளார். இவர் கட்சிக்கு காட்டி வரும் விசுவாசத்தைக் கருத்திற் கொண்டு 2004ஆம் ஆண்டு தேசிய பட்டியலில் இவரின் பெயரையும் ஐ.தே.க சேர்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

    கட்சி வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த போது கட்சியை விட்டு மாறிச் சென்றவர்கள், தற்போதைய சூழலில் கட்சிக்கு ஏற்பட்டுள்ள வளர்ச்சியை கண்டும், அடுத்த ஆட்சியை அமைக்கக் கூடிய வல்லமையை கட்சி பெற்றிருப்பதனையும் அவதானித்துள்ள சிலர் மீண்டும் கட்சிக்குள் வந்து பதவிகளை பெற்றுக் கொள்ள முனைகின்றார்கள். அத்தகையதொரு நிலைப்பாட்டினை சேகு இஸ்ஸதீனும் எடுத்துக் கொண்டிருப்பதாக தெரியவருகின்றது.

    சேகுஇஸ்ஸதீன் மு.காவில் இருந்து விலகி ஐ.தே.கவில் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றுக் கொண்டார். பின்னர் நுஆவில் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் பதவியை பெற்றார். பின்னர் மீண்டும் மு.காவில் இணைந்து கொண்டார். தற்போது ஐ.தே.கவில் இணைய திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றார். அவரை ஐ.தே.கவில் இணைத்துக் கொள்வதில் ஆட்சேபனை இல்லை. ஆனால், அவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வழங்க முடியாது. அதற்கு அவரின் கடந்த கால கட்சி தாவுதல்கள் சாட்சியாகும்.

    எனவே, ஐ.தே.கவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை சம்மாந்துறையைச் சேர்ந்த ஹஸன்அலிக்கு வழங்க வேண்டுமென்றும் அந்த பகிரங்க வேண்டுகோளில் கேட்கப்பட்டுள்ளது.
    SA-
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.தே.கவின் தேசிய பட்டியல் எம்.பியாக ஹஸன்அலியை நியமிக்கவும்: அம்பாரை மாவட்ட ஆதரவாளர்கள் பகிரங்க வேண்டுகோள். Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top