• Latest News

    December 17, 2014

    மஹிந்த ஆட்சியின் கீழ் வடக்கு மக்கள் அதிகாரப்பரவலாக்கலை எதிர்பார்க்க முடியாது!- ராஜித சேனாரத்ன

    மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் கீழ் வடக்கில் உள்ள மக்கள் அதிகாரப்பரவலாக்கலை எதிர்பார்க்க முடியாது என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

    தெ ஹிந்துவுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

    வடக்கு மக்களுக்கு ஜனாதிபதி எதனையும் செய்யப் போவதில்லை. ஆணைக்குழுக்களை அமைப்பதனால் எவ்வித நன்மைகளும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் தமிழ் மக்களுக்கான தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்.

    அத்துடன் நல்லாட்சிக்காக இந்தியாவை போன்று சுயாதீன தேர்தல் ஆணைக்குழு உட்பட்ட குழுக்கள் அமைக்கப்படவேண்டும் என்றும் ராஜித குறிப்பிட்டார்.

    இலங்கையில் மதங்களுக்கு இடையிலான உறவுகள் தகர்ந்து போயுள்ளன.

    இன்று மஹிந்த ராஜபக்சவின் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது. இந்தநிலையில் ராஜபக்சவின் குடும்பத்தினருக்கே அரசாங்கத்தின் 70வீத பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    சகல அமைச்சர்களுக்குமான நிதி ஒதுக்கீடுகள் ஜனாதிபதியின் சகோதரர் அமைச்சர் பசில் ராஜபக்சவின் ஊடாக செல்கின்றன.. இதன்போது பெசில் ராஜபக்சவுக்கு பெருமளவு பணம் சேர்க்கப்படுகிறது என்றும் ராஜித குற்றம் சுமத்தினார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மஹிந்த ஆட்சியின் கீழ் வடக்கு மக்கள் அதிகாரப்பரவலாக்கலை எதிர்பார்க்க முடியாது!- ராஜித சேனாரத்ன Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top