ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுபலசேனா எச்சரித்துள்ளது.
மைத்திரிபால ஆட்சிக்கு வந்தால் மீண்டும் 1915ம் ஆண்டை போன்று சிங்கள முஸ்லிம் கலவரம் ஏற்படும் என்று தாம் கூறியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி பொதுச்செயலாளர் நிஸாம் காரியப்பர் கூறியுள்ளார்.
இதனை அவர் வாபஸ் பெறவேண்டும். இல்லையேல் காங்கிரஸின் மீது வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொதுபலசேனாவின் நிறைவேற்று பணிப்பாளர் திலந்த விதானகெ எச்சரித்துள்ளார்.
இது தொடர்பில் காரியப்பர் பொது விவாதம் ஒன்றுக்கு வரவேண்டும் என்றும் விதானகே கோரியுள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள்!- பொதுபலசேனா
கிழக்கு மாகாணத்தில் பயங்கரவாத குழுக்கள் செயற்படுகின்றன. இதற்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு கோரியுள்ளது.
அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
கிழக்கில் பயங்கரவாதிகள் செயற்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்த போதும் அரசாங்கம் அதனை பெரிதுபடுத்தவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக் கொள்வதற்காகவே இந்த விடயத்தை அரசாங்கம் பெரிதுபடுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனை தடுக்காது போனால் அவுஸ்திரேலியாவில் நேற்று இடம்பெற்ற சம்பவத்தை போன்று இலங்கையிலும் இடம்பெறலாம் என்று தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

TW-

0 comments:
Post a Comment