அபூஇன்ஷாப்:
1990 ஜனவரி 30ம் திகதி விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சம்மாந்துறையை சேர்ந்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் மர்ஹூம் எம்.வை.எம்.மன்சூர் அவர்களின் 25வது ஆண்டு கத்தமுல் குர்ஆன் மற்றும் ஞாபகாத்த நிகழ்வு நேற்று (30) மாலை சம்மாந்துறை அப்துல்; மஜீட் நகர மண்டபத்தில் 'வேர்கள் விழுதுகள் சமூக நல அமைப்பின்' ஏற்பாட்டில் நடை பெற்றது.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் பதில் பதிவாளர் கவிஞர் மன்சூர் ஏ.காதிர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் பிரதம அதீதியாக சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர அபிவிருத்து தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புப்துறை அமைச்சர் றவூப் ஹக்கீம் கலந்த கொண்டார்.
கௌரவ அதீதிகளாக சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் சுகாதாரத்துறை ராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹசன்அலி-எம்.பி, பாராளுமன்ற உறுப்பினர் பைஸால் காசீம் - எம்.பி, கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ;ஷேய்க் எம்.ஐ.அமீர், சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்ச10ர், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப் உட்பட அமைச்சு அதிகாரிகள், அரசியல் பிரதிநிதிகள், உலமாக்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர அபிவிருத்து தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புப்துறை அமைச்சருமான றவூப் ஹக்கீம் உரையாற்றுகையில் மர்ஹூம் எம்.வை.எம்.மன்சூர் அவர்கள் மரணித்து 25 ஆண்டுகள் கடந்து விட்டன அந்த நிகழ்வு இன்று நடைபெற்றது போன்று எம்முன் நிழலாடுகின்றது அவர் எமது சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸ் என்ற நிறுவனத்தின் முதன்மை போராளி அன்று எமது பிராந்தியங்களில் காணப்பட்ட ஊழல் ஒளிப்பக்கு எதிராக செயற்பட்டு வெற்றி கண்டவர் நேர்மை நியாயம் நிலைபெற துணிச்சலுடன் செயற்பட்டவர்.
அன்று விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாச அரசுக்கும் இடையில் நிலவிய சமரச உடன் படிக்கைகளின் பின்னர் நடாத்தப்பட்ட புலிகளின் கொடூர செயற்பாடுகளில் இந்த சம்பவங்கள் ஈடு செய்யமுடியாதவைகள் 1989 ஆண்டுகளில் பேருவளையை சேர்ந்த நௌபர், அக்கரைப்பற்று மாகாண சபை உறுப்பினர் அலிஉதுமான் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கடந்த கால தசாப்தங்களில் தமிழர் விடுதலைப் போராட்டங்களில் தேர்தல்களை பகிஷ;கரித்தமை அவர்கள் செய்த பாரிய தவராகும். இன்று எமது நாட்டில் நிலைநிறுத்தப்பட்டிருந்த கொடூர ஆட்சியினை மாற்ற தொண்டைகிழிய பெசியவர்கள்தான் அன்று 2005 நடைபெற்ற தேர்தலை அவர்கள் பகிஷ;கரித்ததன் விளைவாகவே இந்த கொடூர யுகம் தோன்றியது கொடூர ஆட்சிக்கு வழிவகுத்தது.
மக்களை அச்சுறுத்தி அடவடித்தனங்களையும் ஆயுதக் கலாசாரத்தையும் கொண்டு உச்சக்கட்ட போராட்டத்தின் பின்னடைவு இன்று கதிரைகளுக்கான போராட்டம் நடைபெறுகின்றது.
ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தற்போது கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரங்களுக்கு பாரிய கைறுழுப்புக்கள் நடை பெற்று வருகின்றன. கடந்த மாகாண சபைத் தேர்தலின் முடிவுகளின் பின்பு தமிழ்தேசிய கூட்டுச் சேரவில்லை எமது எந்த முடிவுகளுக்கும் ஒத்துக் கொள்ளவில்லை என்று எம்மை வசைபாடுகின்றனர்.
எது எவ்வாறாயினும் எமது கட்சிக்கென்ற ஒரு கொள்கையுள்ளது அதற்கென்ற தனித்துவம் உள்ளது அதனை மீறி எந்தவொறு முன்னெடுப்புக்களும் நகராது.
சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸின் உண்மையான கோரிக்கைகளையும் எமக்கான உரிமை தன்மையினையும் ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார். நாங்கள் நிதர்சனமானமுறையில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் நடந்து கொள்கின்றோம் அவர்கள் எங்களைபட்பற்றிய தப்பான உணர்வுகளை வெளியிட்டு வருகின்றனர் நாங்கள் அவர்களை விமர்சிக்க தயாரில்லை.
ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு சிறி லங்கா முஸ்லீம் காங்கிரசுடன் செய்த கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் கிழக்கு மாகாணத்தினுடைய முதலமைச்சரை தெரிவு செய்கின்ற அதிகாரத்தை எங்களிடம் ஒப்படைத்துள்ளனர் அதனடிப்படையில் சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸ் இன்னும் ஓரிரு தினங்களில் முதலமைச்சரை தீர்மானிக்கும்.
இந்த சந்தர்பத்தில் நாங்கள் ஐக்கிய தேசிய கட்சியினையும் அழைத்துள்ளோம் அவர்களுக்குரிய வாய்புக்களை ஏற்படுத்திக் கொடுப்போம் அதே போன்று கூட்டமைப்பும் எங்களுடன் இணைந்து கொள்ளலாம் அவர்களுக்குரிய வற்றையும் நாங்கள் வழங்கவுள்ளோம்.
நாங்கள் மைத்திரியின் நல்லாட்சியில் முதல் கிழக்கு மாகாண ஆட்சியினை நிறுவி எங்களுக்கு உரித்தான பதிவிகளைப் பொற்று புதியதோர் அரசியல் கலாசாத்தை எற்படுத்துவோம் எனக் கூறியதுடன் அந்த நல்லாட்சிக்கான புதிய உத்வேகத்தை இந்த சம்மாந்துறை மண்னின் சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸின் முதல் மகன் இந்த சமூகத்துக்காக உயிர் திறந்த மர்ஹூம் எம்.வை.எம்.மன்சூரின் 25வது ஞாபகாத்த தினத்திலிருந்து ஆரம்பிப்போம் எனவும் அமைச்சர் றவூப் ஹக்கீம் தெரிவித்தார்.







0 comments:
Post a Comment