• Latest News

    February 16, 2015

    சம்மாந்துறைப் பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்: பிரதியமைச்சர் அனோமா கமகே

    -அபூ-இன்ஷாப்:
    இலங்கையின் நெல் உற்பத்தியில் அம்பாறை மாவட்டம் 23 வீதமான நெல்லை உற்பத்தி செய்கின்றது. அதிலும் விஷேடமாக சம்மாந்துறை பிரதேசம் மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. அந்த வகையில் சம்மாந்துறைப் பிரதேச விவசாயிகள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை  அரசின் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் தீர்த்து வைக்கப்படவுள்ளன என நீர்பாசனத்துறை மற்றும் கைத்தொழில் பிரதியமைச்சர் திருமதி அனோமா கமகே தெரிவித்தார்.
    சம்மாந்துறை சென்னல் கிராமத்தில்  நடைபெற்ற விவசாயப்பிரதிநிதிகளுடனான கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
    வட்டவிதானை ஹனீபா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில் இந்த நாட்டில் நிலை கொண்டிருந்த அராஜக அரசாங்கத்தை இல்லாமல் செய்து நல்லாட்சிக்கான புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு எந்தவித பேதமுமின்றி வாக்களித்த உங்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
    அந்த  அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதியமைச்சுப்பதவியினைக் கொண்டு இந்தப் பிரதேச விவசாயிகள் எதிர் நோக்ககின்ற விவசாயப் பாதைகள், குளங்கள் என்பவற்றை அவிவிருத்தி செய்யவுள்ளோன் உங்களது பிரச்சினைகள் அனைத்தையும் இங்குள்ள சம்மாந்துறைப் பிரதேச நீர்பாசன பொறியியலாளர் றிப்னாஸ் அவர்களிடம் ஒப்படையுங்கள் அதனை முன்னுரிமை அடிப்படையில் மேற்க் கொள்ளவுள்ளேன் எனவும் தெரிவித்தார்.
    அத்துடன்  அம்பாறையில் நீர்பாசன அமைச்சுக்கான காரியாலயம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ன அவற்றில் பொறியியலாளர் உட்பட பல அதிகாரிகள் 5 தினங்களும்  கடமையாற்றுவார்கள் உங்களது பிரச்சினைகளை அங்கு தெரிவியுங்கள் அவற்றை நான் செய்து தரவுள்ளேன்.
    இந்தப் பிரதேச மக்களின் இந்தப் போக நெல்லை அரச உத்தரவாத விலைக்கு எதிர்வரும் 18ம் திகதி புதன் கிழமையிலிருந்து கொள்வனவு செய்து உடன் பணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளேன்.
    ஏதிர்வரும் மாதத்திலிருந்து 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகள் தோறும் வைத்திய முகாம்களை நடாத்தவுள்ளோம். அத்துடன் நடமாடும் சேவை ஒன்றினை நடாத்த ஏற்பாடுகளை செய்து வருகின்றேன் எனவும் தெரிவித்தார்.
    அத்துடன் எமது பிராந்தியங்களிலுள்ள சிரேஷ;ட வைத்திய நிபுணர்களை கொண்டு வந்து இலவச கண் சத்திர சிகிச்சை முகாம் நடாத்தவுள்ளோம். உங்களது பிரதேசத்திலுள்ள கண் சத்திர சிகிச்சை செய்ய வேண்டியிருப்பவர்கள் அம்பாறையிலுள்ள காரியாலயத்தில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறும் தெரிவித்தார்.
    இந்த நிகழ்வில் அதிதிகளாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தயாகமகே, ஜக்கியதேசிய கட்சியின் சம்மாந்துறை தொகுதி அமைப்பாளர் ஹசன்அலி, நீர்பாசன பொறியியலாளர் றிப்னாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.







    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சம்மாந்துறைப் பிரதேச விவசாயிகளின் பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும்: பிரதியமைச்சர் அனோமா கமகே Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top