• Latest News

    February 15, 2015

    மதபன்முகத்தன்மை ,பல்லினத்தன்மை என்பன புதிய இங்கையின் மைல்கற்கள்: அமெரிக்காவில் மங்கள

    உயர்ந்த மட்ட பொருப்புக்கூறல் ,மனித உரிமை மற்றும் ஜனநாயகத்தை பாதுகாத்தல் ஊழலுக்கு எதிராக போராடுதல் உள்ளிட்ட வற்றை மேற்கொள்வதற்கு நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் சிறந்த சந்தர்பத்தை இலங்கைக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெரி தெரிவத்துள்ளார்
    அதேவேளை புதிய இலங்­கை­யா­னது ஒற்­றுமை பன்­மு­கத்­தன்மை கலா­சார மற்றும் மத பன்­மு­கத்­தன்மை பல்­லி­னத்­தன்மை போன்­றவை புதிய இலங்­கையின் மைல்­கற்­க­ளாக இருக்கும் என வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ர அமெரிக்காவில் தெரிவித்துள்ளார்
    அமெ­ரிக்­கா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்­டுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவை அந்­நாட்டின் இரா­ஜாங்க செயலர் ஜோன் கெரி நேற்று முன்­தினம் வாஷிங்­டனில் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.
    இதே­வேளை இந்த சந்­திப்பில் கருத்து வெளி­யிட்ட வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர அமெ­ரிக்­காவை இலங்கை அச்­சு­றுத்­த­லாக பார்க்­க­வில்லை என்றும் அமெ­ரிக்­காவை ஒரு வாய்ப்பாகவே பார்ப்­ப­தா­கவும் 100 நாள் வேலைத்­திட்­டத்தில் நல்­லி­ணக்­கத்­துக்கு மிக முக்­கி­ய­மான இடத்தை வழங்­கி­யுள்ளோம் எனவும் குறிப்­பிட்­டுள்ளார்.
    அத்­துடன் இலங்­கைக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யி­லான உறவை வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்கும் இரண்டு நாடு­களும் இணக்கம் கண்­டுள்­ளன.
    அமெ­ரிக்­கா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்­டுள்ள வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேற்று முன்­தினம் அமெ­ரிக்க நேரப்­படி பிற்­பகல் இரண்டு மணி­ய­ளவில் வொஷிங்­டனில் அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லா­ளரை சந்­தித்து பேச்சு நடத்­தினார்.
    ஜோன் கெரி
    இதன்­போது முதலில் கருத்து வெளி­யிட்ட அமெ­ரிக்கா இரா­ஜாங்க செயலர் ஜோன் கெர்ரி இலங்­கையின் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீ­ரவை அமெ­ரிக்­கா­வுக்கு வர­வேற்­பதில் மகிழ்ச்­சி­ய­டை­கின்றேன். இது முக்­கி­யத்­து­மிக்க தரு­ண­மாகும். கடந்த ஜன­வரி மாதம் எட்டாம் திகதி இலங்­கையில் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் மாற்­றத்­துக்­காக வாக்­க­ளிக்­கப்­பட்­டது. இலங்கை புதிய வழியில் பய­ணிப்­ப­தற்­கான ஆணையை மக்கள் வழங்­கினர்.
    இந்த மாற்­ற­மா­னது உயர்ந்­த­மட்ட பொறுப்­புக்­கூறல் மனித உரிமை மற்றும் ஜன­நா­ய­கத்தை பாது­காத்தல் ஊழ­லுக்கு எதி­ராக போரா­டுதல் உள்­ளிட்­ட­வற்றை மேற்­கொள்­வ­தற்கு சந்­தர்ப்­பங்­களை திறந்­து­விட்­டுள்­ளது. மக்­க­ளுக்­காக பேசும் அர­சாங்கம் உரு­வா­கு­வ­தற்கு சந்­தர்ப்பம் உள்­ளது. இலங்­கையின் புதிய அர­சாங்கம் முன்­னெ­டுத்­துள்ள 100 நாள் வேலைத்­திட்டம் தொடர்பில் நாங்கள் ஆச்­ச­ரி­ய­ம­டை­கின்றோம். அந்த வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுக்க நாங்கள் வாழ்த்­து­கின்றோம்.
    மேலும் அமை­தி­யான மற்றும் சிறந்த எதிர்­கா­லத்­துக்­காக 30 வருட யுத்­தத்­தி­லி­ருந்து இலங்கை அர­சாங்கம் எவ்­வாறு வெளி­வ­ரப்­போ­கின்­றது என்­பது தொடர்பில் நாங்கள் இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­தப்­போ­கின்றோம். அந்­த­வ­கையில் இலங்­கையின் புதிய வெளி­வி­வ­கார அமைச்­ச­ருடன் வேலை செய்­வ­தற்கு எதிர்­பார்க்­கின்றோம் என்றார்.
    சந்­திப்பில் கருத்து வெளி­யிட்ட வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர குறிப்­பி­டு­கையில்
    இலங்­கையில் ஜன­நா­யக மாற்றம் ஏற்­பட்­டுள்ள சந்­தர்ப்­பத்தில் நான் இங்கு வந்­துள்ளேன். அந்­த­வ­கையில் நாங்கள் 100 நாள் இலட்­சிய வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்­துள்ளோம். ஜன­நா­யக மறு­சீ­ர­மைப்பு அர­சி­ய­ல­மை­பபு திருத்­தங்கள் என்­ப­ன­வற்றை முன்­னெ­டுக்­க­வுள்ளோம். மேலும் நல்­லி­ணக்­கத்­துக்கு மிக முக்­கி­ய­மான இடத்தை வழங்­கி­யுள்ளோம். புதிய இலங்­கை­யா­னது ஒற்­றுமை பன்­மு­கத்­தன்மை கலா­சார மற்றும் மத பன்­மு­கத்­தன்மை பல்­லி­னத்­தன்மை போன்­றவை புதிய இலங்­கையின் மைல்­கற்­க­ளாக இருக்கும்.
    அமெ­ரிக்­கா­வுடன் கடந்த பல தசாப்­தங்­க­ளாக எங்­க­ளுக்கு காணப்­பட்ட உறவை மேலும் பலப்­ப­டுத்­து­வ­தற்கு நாங்கள் செயற்­ப­ட­வுள்ளோம். கடந்த சில வரு­டங்­களில் இல­ங­கைக்கும் அமெ­ரிக்­கா­வுக்கும் இடை­யி­லான உறவில் சில பாதிப்­புக்கள் ஏற்பட்டன. எனவே இரண்டுநாடுகளுக்கு இடையலான உறவை மீண்டும் கட்டியெழுப்புவது எனது கடமையாக நான் உணர்கின்றேன். எனவே அமெரிக்க இராஜாங்க செயலர் ஜோன் கெர்ரியுடன் மிகவும் நெருக்கமாக வேலை செய்வதற்கு எதிர்பார்க்கின்றேன். அமெரிக்காவுடன் உறவை கட்டியெழுப்ப எதிர்பார்க்கின்றேன். எமது புதிய அரசாங்கத்துக்கு அமெரிக்கா அச்சுறுத்தல் அல்ல. அதற்கு மாறாக அமெரிக்கா எமககு சிறந்த சந்தர்ப்பமாகும் என்றார்.

    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: மதபன்முகத்தன்மை ,பல்லினத்தன்மை என்பன புதிய இங்கையின் மைல்கற்கள்: அமெரிக்காவில் மங்கள Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top