• Latest News

    February 22, 2015

    சிறுபான்மைக் கட்சிகள் தொகுதிவாரி தேர்தல் முறைக்கு எதிர்ப்பு


    தொகுதிவாரி தேர்தல் முறையை அல்லது பெரும்பான்மை தேர்தல் முறையை மையமாக கொண்ட தேர்தல் சீர்திருத்த முறைக்கு சிறுபான்மைக் கட்சிகளான , ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் , அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய தொழிலாளர் சங்கம்,மலை­யக மக்கள் முன்­னணி உள்­ளிட்ட கட்­சிகள் பல எதிர்ப்பு தெரிவித்துள்ளதுடன் சகல அர­சியல் கட்­சி­க­ளுக்கும் நியா­ய­மான, ஒரு தேர் தல் முறை­மையை ஏற்­ப­டுத்­து­மாறும் வலி­யு­றுத்­தி­யுள்­ளன.
    இவ்­வா­றான புதிய தேர்தல் முறை­மைக்கு எதி­ராக சிறு­பான்மை கட்­சிகள் தமது எதிர்ப்பை   தெரிவித்­துள்­ள­மை­யினால் எதிர்­வரும் பொதுத் தேர்­தலை புதிய தேர்தல் முறைப்­படி நடத்த முடியாதுள்­ள­தா­கவும் தெரிவிக்கப்படுகிறது
    இது தொடர்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளதாவது , நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் காணப்­படும் அதி­கா­ரங்­களைக் குறைப்­ப­தற்கு சகல கட்­சி­களும் ஒத்­து­ழைப்பு வழங்கும் நிலை காணப்­ப­டு­கின்­றது. அதே­போன்று தற்­போ­துள்ள தேர்தல் முறை­மை­யினை மாற்று­மாறும் கட்­சிகள் வலி­யு­றுத்தி வரு­கின்­றன.
    எனவே, இந்த தேர்தல் முறை­மை­யினை மாற்றி சகல கட்­சி­க­ளுக்கும் நியாயம் கிடைக்கும் வகையி­லான தேர்தல் முறை­மை­யொன்­றினை ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் நிச்­ச­ய­மாக அறி­மு­கப்­ப­டுத்தும். ஆனால், அது எதிர்­வரும் பொதுத் தேர்­த­லுக்கு முன்னர் மேற்­கொள்ள முடியுமா என்­பதை உறு­தி­யாகக் கூற முடி­யா­துள்­ளது. அநேகமாக எதிர்வரும் பொதுத் தேர்தல் தற்போது நடைமுறையிலுள்ள முறைப்படியே நடக்கும் சாத்தியமுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
    தற்போது நடைமுறையில் இருக்கும் விகிதாசார தேர்தல் முறையே சிறுபான்மையினர்  பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்ற சாதகாமான  முறையை கொண்டுள்ளதுடன் பெருன்பான்மை முறை அல்லது தொகுதிவாரி தேர்தல் முறை சிறுபான்மையினர்  பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை  குறைத்துவிடும் ஆபத்து கொண்டது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
    விகிதாசார தேர்தல் முறையில் குறைபாடுகள் உள்ளபோதும் அதனை சீரமைக்கும்போது , அதில் உள்ள சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுக்காண  நன்மைகளையும் அகற்றிவிடுவது ஏற்றுகொள்ள முடியாததாகும்
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சிறுபான்மைக் கட்சிகள் தொகுதிவாரி தேர்தல் முறைக்கு எதிர்ப்பு Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top