எம்.வை.அமீர் எம்.ஐ.சம்சுதீன்:
கல்முனை மாநகரசபை எல்லைக்குள் காணப்படும் காணித்தட்டுப்பாட்டை மிகநீண்ட காலமாக தான் அறிந்தவன் என்றவகையில், கடந்த மாநகரசபைத் தேர்தலின்போது வெளியிட்ட தனது தேர்தல் விஞ்சாபனத்தில், காணியற்ற மக்களுக்கு காணிகளை பெற்றுக்கொடுப்பது தொடர்பான விடயங்களை உள்ளடக்கியிருந்ததாகவும், பிரதிமுதல்வராக இருந்த சந்தர்ப்பத்திலும் முதல்வராக பணியைத் தொடர்கின்ற சந்தர்ப்பத்திலும் இம்மக்களின் பிரட்சினைகளை தீர்ப்பதற்காக, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதாகவும் இம்மக்களின் வேதனையை போக்கக் கூடிய வாய்ப்பு அப்போதைய சுழலில் சரியாக அமையவில்லை என்றும், பாதிக்கப்பட்ட மக்கள் கேட்ட துஆக்கள் காரணாமாக தற்போது பழம்நழுவி பாலில் விழுந்தது போல், குறித்த பிரட்சினைகளை தங்களது கைகளாலேயே தீர்க்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக கல்முனை மாநகரசபையின் முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளருமான சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பர் அவர்கள் தெரிவித்தார்.
2004ல் இடம்பெற்ற பாரிய சுனாமி கடற்பேரலைகளின் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பிரதேசமக்கள், கடலை அண்டிய பிரதேசத்தில் இருந்து மேற்கே நகர்ந்து, செய்கைபன்னப்படாத வயல்நிலங்களை கொள்வனவு செய்து அங்கு தங்களது குடியிருப்புக்களை நிறுவமுட்பட்டபோது அதற்க்கு தடைகள் ஏற்பட்டன. இதன்காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கும், கல்முனை மாநகரசபையின் முதல்வரும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளருமான சட்ட முதுமாணி நிஸாம் காரியப்பர் அவர்களுக்கும் இடையேயான சந்திப்பு சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேட்புமண்டபத்தில், கல்முனை மாநகரசபையின் பிரதிமுதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் சிரேஷ்ட பிரதித்தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து உரையாற்றிய போதே முதல்வர் நிஸாம் காரியப்பர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கிட்டத்தட்ட 300 ஏக்கர் காணிகளை மூடிகொள்வதற்க்கான அனுமதியை பெறுவதற்கான எல்லா நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், அதனுடாக காணிகளைக் கொள்வனவுசெய்து மூடிகொள்ளமுடியாமல் இருந்த மக்களின் பிரட்சினை தீர்ந்துவிடும் என்றும் தெரிவித்தார்.
முதல்வராக வருவதற்கு முதல் கொண்டுவந்த தேர்தல் விஞ்சபனத்தில் என்னால் கூறப்பட்ட விடயம் தொடர்பாக இறைவனால் கேட்கப்படும் கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்கவேண்டும் என்பதற்காகவே இந்தவிடயத்தில் மிகுந்தகருசனையுடன் இருக்கின்றேன் என்றும், மற்றவர்கள் நினைப்பது போன்று இவைகளைக்கொண்டு தான் அரசியல் செய்யப்போவதுதில்லை என்றும் தெரிவித்தார்.
இப்பிராந்திய மக்களின் காணிப்பிரச்சினைகள் தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் நகராஅபிவிருத்தி அமைச்சின் செயலாளரை சந்தித்த போதெல்லாம் என்னை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசினை விட்டு விட்டுவா வேண்டிய அனைத்தையும் செய்வேன் வேண்டிய உபகரணங்களை தருகிறேன் என்றார். ஆனால் அதற்க்கு மசியவில்லை இப்போது இறைநாட்டம் எல்லாமே எங்களது கையில் இருக்கிறது என்றார்.
அமையவிருக்கும் புதிய கிராமம் தற்போது எமது ஊர்கள் இருப்பதுபோல் அமையாது சகலவசதிகளுடனும் திட்டமிடப்பட்டு வீதிகள் வடிகான்கள் இடப்பட்டு ஒரு முன்மாதிரியான முறையில் அமையும் என்றும் அதற்காக காணி உரிமையாளர்கள் கல்முனை மாநகரசபைக்கு ஒரு சிறிய தொகைப்பணத்தை செலுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
அல் அமானா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதிமுதல்வரும் தற்போதைய உறுப்பினருமான எம்.ஐ.பிர்தௌஸ், கல்முனை மாநகரசபையின் உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஐ.றக்கீப், சாய்ந்தமருது மாளிகைக்காடு பள்ளிவாசல்களின் தலைவர் வை.எம்.ஹனிபா,காரைதீவு பிரதேசசபை உறுப்பினர் ஏ.எம்.பாயிஸ்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்பீட உறுப்பினரும் போக்குவரத்து பிரதியமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான ஐ.எல்.எம்.மாஹீர், காரைதீவு பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் போன்றோரும் கல்முனை நகர அபிவிருத்தி அதிகாரசபை அலுவலக பொறுப்பாளர் திருமதி ஜே.தியாகராஜா, ஆசியான் மன்ற திட்டமிடல் அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், கல்முனை நகர அபிவிருத்தி அதிகாரசபை படவரைஞனர் எம்.சீ.எம்.முனீர் போன்றோரும் அல் அமானா நற்பணி மன்றத்தின் தலைவர் ஏ.எல்.ஏ.பரீத் ஹாஜியார் ஆகியோரும் பங்கு கொண்டிருந்தனர்.
கல்முனை மாநகரசபையின் பிரதிமுதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் சிரேஷ்ட பிரதித்தலைவருமான ஏ.எல்.அப்துல் மஜீத், கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதிமுதல்வரும் தற்போதைய உறுப்பினருமான எம்.ஐ.பிர்தௌஸ், சாய்ந்தமருது மாளிகைக்காடு பள்ளிவாசல்களின் தலைவர் வை.எம்.ஹனிபா மற்றும் அல் அமானா நற்பணி மன்றத்தின் தலைவர் ஏ.எல்.ஏ.பரீத் ஹாஜியார் ஆகியோர் இம்மக்களின் காணிப்பிரட்சினையை உடனடியாக தீர்த்துவைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உரையாற்றினர்.



0 comments:
Post a Comment