• Latest News

    April 06, 2015

    கலாச்சார விழாவும் நிந்தவூரின் வரலாறும், வாழ்வியலும், நூல் வெளியீடும்

    (சுலைமான் றாபி)
     நிந்தவூர் பிரதேசத்தின் சரித்திர வரலாற்று வாழ்வியல்களை மீட்டிப் பார்க்கும் கலாச்சார நிகழ்வும், நூல் வெளியீட்டு நிகழ்வும் நேற்று 04.04.2015 (சனிக்கிழமை) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

    நிந்தவூர் பிரதேச செயலாளர் ஹாஜியாணி திருமதி ஆர்.யு. அப்துல் ஜலீல் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும், சுகாதாரத்துறை  இராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி, பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன்,  அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பி. வணிகசிங்க, அம்பாறை மாவட்ட மேலதிக செயலாளர்களான கே.விமலநாதன், எம்.ஐ.அமீர், கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் டி.யு.டபிள்யு, விக்கிரம ஆராய்ச்சி உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள், கல்விமான்கள், இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என அனைவரும்  கலந்து சிறப்பித்தனர்.

    நிந்தவூரின் வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெற்ற இக்கலாச்சார விழாவில் அதன் தொன்மை மரபுகளும் அதனுடன் இணைந்ததான   கலாச்சார  மற்றும்  கலை அம்சங்களுடன் கூடிய நிகழ்வுகளும் இவ்விழாவில் அரங்கேற்றப்பட்டது சிறப்பம்சமாகக் காணப்பட்டது.

    மேலும்  இந்த  நிகழ்வில் கலை மற்றும் இலக்கியத்துறைகளில் சாதனை படைத்து தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியிலும் இவ்வூரிற்கு கீர்த்தியைப் பெற்றுகொடுத்தவர்களும், அண்மையில் நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட 'கலாச்சார போட்டி நிகழ்சிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களும் இதில் பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு, நிகழ்வின் இறுதியில் நிந்தவூரின் சரித்திரங்களை  மீட்டிப் பார்க்கும் ' நிந்தவூர் வரலாறும், வாழ்வியலும்' எனும் நூல் கலந்து கொண்ட அதிதிகளுக்கு மட்டும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.












    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: கலாச்சார விழாவும் நிந்தவூரின் வரலாறும், வாழ்வியலும், நூல் வெளியீடும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top