(பழுலுல்லாஹ் பர்ஹான்)
காத்தான்குடி
இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் ஏற்பாட்டில் பெண்களுக்கான ஜனாஷா
குளிப்பாட்டுவதற்கான பயிற்சிப்பட்டறை ஒன்று கடந்த (03.04.2015)
காத்தான்குடி இஸ்லாமிய இளைஞர் முன்னணியின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் மிக ஆர்வத்தோடு கலந்து கொண்டனர்.
இப்பயிற்சி
நெறியின் வளவாளர்களாக மஃஹதுஸ்ஸுன்னா மகளீர் அரபிக்கல்லூரி
விரிவுரையாளர் மௌலவியா சில்மியா தாரிக் தலைமையிலான குழுவினர் கலந்து
கொண்டனர்.




0 comments:
Post a Comment