• Latest News

    April 06, 2015

    சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் வழங்குவதில் எந்த தயக்கமுமில்லை: அமைச்சர் ஹக்கீம்

    ( எஸ்.எம்.எம்.றம்ஸான் )
    சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் வழங்குவதில் எந்த தயக்கமுமில்லையென அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
    சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போது சாய்ந்தமருது உள்ளூராட்சிமன்றக் கோரிக்கை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு யாது? என ஊடகவியலாளர் ஒருவரால் வினவப்பட்டதற்கு சாய்ந்தமருது மக்களின் கோரிக்கை தனியான உள்ளூராட்சி மன்றம் என்றால் அதனை நிறைவேற்றி வைப்பதில் எந்த தயக்கமும் காட்டப் போவதில்லை என்ற உறுதிப்பாட்டையும் அமைச்சர் வழங்கினார்.

    சாய்ந்தமருது அபிவிருத்தி தொடர்பாக,நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவருமான ரவுப் ஹகீமிற்கும், சாய்ந்தமருது அபிவிருத்தித் திட்டமிடல் குழுவுக்குமிடயிலான சந்திப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (05)   சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

    இதன்போது சாய்ந்தமருது அபிவிருத்தி தொடர்பில், நகர அபிவிருத்தி அதிகாரசபையின் உயர் அதிகாரிகளுக்கும், சாய்ந்தமருது அபிவிருத்தித் திட்டமிடல் குழுவுக்குமிடையில், துரிதமாக சந்திப்பொன்றை ஏற்படுத்தி அதனூடாக விரைவான அபிவிருத்திகளை மேற்கொள்வதென இணக்கம் காணப்பட்டது.
    இதேவேளையில் தினம் தினம், புதுப் புதுச் சர்ச்சைகளை உருவாக்கிவரும் சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் ஹக்கீமிடம் இதன்போது விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. அதனை செவிமடுத்த அமைச்சர், இது தொடர்பில் முதலமைச்சருடனும் பேசி  விரைவில் தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்தார்.
    இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம், மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், ஏ.எல்.எம்.நஸீர், அக்கரைப்பற்று மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் ஹனீபா மதனி, பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது /மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம்.ஹனீபா மற்றும் சாய்ந்தருது அபிவிருத்திக் குழு அங்கத்தவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி மன்றம் வழங்குவதில் எந்த தயக்கமுமில்லை: அமைச்சர் ஹக்கீம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top