எம்.வை.அமீர்-
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின்
திகாமடுல்ல மாவட்ட இளைஞர் காங்கிரஸ் ஒன்று கூடல் சாய்ந்தமருது லீ மெரிடியன்
மண்டபத்தில் 2015-08-13ம்
திகதி நிகழ்ச்சியின் ஒருங்கினைப்பாளர் றிஸ்டி ஷரீப் அவர்களின் தலைமையில்
இடம்பெற்றது.
திகாமடுல்ல மாவட்ட மாவட்டத்தின்
நாலாபக்கங்களில் இருந்தும் உணர்வுபூர்வமான முறையில் திரண்டிருந்த இளைஞர்கள்
பங்குகொண்ட இம்மாபெரும் ஒன்றுகூடலுக்கு பிரதம அதிதியாக கிழக்குமாகாண சபையின்
உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் அகில இலங்கை
மக்கள் காங்கிரஸின் தலைவரால் தேசியப்பட்டியல் ஊடாக பாராளமன்றத்துக்கு அழைத்துச்
செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுபவருமான ஏ.எம்.ஜெமீல் கலந்து கொண்டார்.
இங்கு உரையாற்றிய ஜெமீல்,
இந்த பிராந்தியம் மறைந்த தலைவர் மர்ஹும் அஷ்ரப் அவர்களின் மறைவைத் தொடர்ந்து கடந்த பதினைந்து வருடங்களாக பாழடைந்து கிடக்கிறது
என்றும், அந்த நிலைமை இன்னும் படு மோசமாகிக் கொண்டு செல்வதாகவும், குறைந்தது
இந்த முறை தேர்தலிலாவது மக்கள் ஒரு பாரிய அரசியல் தலைமைக்கான மாற்றத்தினை
ஏற்படுத்த வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார்.
இன்றைய இளைஞர்களை நாளைய
தலைவர்களக்குவோம் எனும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் திட்டத்தின் கீழ்
இளைஞர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகளை வழங்கிவரும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ்
இவ்வாறான ஒன்றுகூடல்களை செய்துவருவதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் தொடர்ந்து
உரையாற்றிய ஜெமீல்,மாற்றத்துக்கான
வாய்ப்பினை மக்கள் காங்கிரசும் அதன் தலைவர் ரிசார்ட் பதியுதீனும் தற்போது சாத்தியப் படுதியிருபதாகவும், தலைசிறந்த
பத்து வேட்பாளர்கள் இப்பணியை நோக்கி பயணிப்பதாகவும், தான் இந்த பணியை
சாத்தியப்படுத்த தன்னை முழுமையாக
அற்பணித்து இந்த மாற்றத்தை ஏற்படுத்த தன்னோடு இணையுமாறும் இளைஞர்களை
கேட்டுக்கொண்டார்.
சத்தியம் என்றாவது ஒருநாள் வெல்லும் என்றும் உண்மையின் பக்கம்
அணிதிரளுமாறும் அங்கு கூடியிருந்த இளைஞர்களை கேட்டுக்கொண்டார். நிகழ்வில் முன்னாள் பாராளமன்ற
உறுப்பினர் சேகு இஸ்ஸதீன் அவர்களும் கல்முனை மாநகரசபையின் அகில இலங்கை மக்கள்
காங்கிரசின் உறுப்பினர் சீ.எம்.முபீத் அவர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரசின்
கல்முனைத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் சீ.எம்.ஹலீம் உட்பட இளைஞர்களும்
பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.




0 comments:
Post a Comment