ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் 70
உறுப்பினர்கள் நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பார்கள் என ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் பொருளாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பெரும் எண்ணிக்கையிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள் நல்லாட்சி
அரசாங்கத்திற்கு ஆதரவானவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.ஸ்ரீலங்கா
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்
இதனைத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பினர் செய்த சூழ்ச்சித்
திட்டங்களினால் தமது தரப்பைச் சேர்ந்த சிலரால் தேர்தலில் வெற்றியீட்ட
முடியாத நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
திட்டமிட்ட வகையில் தாம் உள்ளிட்ட சிலரை மஹிந்த தரப்பு தோற்கடித்ததாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 65 பாரளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் அமவார்கள் என
முன்னாள் அமைச்சுர் வாசுதேவ நாணயக்கார அண்மையில் குறிப்பிட்டிருந்தார்
என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment