• Latest News

    August 15, 2015

    ஐ.ம.சு.முன்னணி வெற்றியீட்டினால், பிரதமராகும் வாய்ப்பு பௌசிக்கு!

    பொதுத்தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அதிக ஆசனங்களை கைப்பற்றி வெற்றி பெற்ற அடுத்த பிரதமராக ஏ.எச்.எம். பௌசி நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக ஜனாதிபதி செயலக தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
     
    இவ்வாறான நிலைமை உருவாகினால், இலங்கை அரசியல் வரலாற்றில் அது திருப்புமுனையாக அமையும் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இலங்கையின் பிரதமரை நியமிக்கும் முழுமையான அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது.

    ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அடுத்த பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் என யோசனை முன்வைத்த, ஜோன் செனவிரட்ன, நிமால் சிறிபால டி சில்வா, ஷமல் ராஜபக்ச, சுசில் பிரேமஜயந்த, அனுர பிரியதர்ஷன யாப்பா, அதாவுத செனவிரட்ன ஆகியோர் தமக்கு பிரதமர் பதவி வேண்டாம் எனக் கூறி நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதம் அனுப்பியிருந்தனர்.

    எனினும் பிரதமராக நியமிக்கும் தகுதி உள்ளவர்களில் பெயர் குறிப்பிடப்பட்டிருந்த ஏ.எச்.எம். பௌசி, அந்த கடித்தில் கையெழுத்திட்டிருக்கவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பௌசி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர் என்ற வகையிலும் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்திற்கு தான் முழுமையாக கட்டுப்படுவதாக கூறியுள்ளார்.

    எவ்வாறாயினும் முஸ்லிம் இனத்தவரான பௌசியை நாட்டின் இரண்டாம் குடிமகனாக நியமிக்க எடுக்கப்படும் நடவடிக்கை நாட்டின் அரசியல் வரலாற்றில் முக்கியமான முற்போக்கான நடவடிக்கை என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

    சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக இருந்த போது, தமிழரான லக்ஸ்மன் கதிர்காமரை பிரதமராக நியமிக்க முயற்சித்தார். எனினும் நாட்டின் பௌத்தர்கள் கலவரமடையக் கூடும் எனக் கூறி மகிந்த ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன உட்பட பலர் அந்த முயற்சியை தடுத்து நிறுத்தினர்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐ.ம.சு.முன்னணி வெற்றியீட்டினால், பிரதமராகும் வாய்ப்பு பௌசிக்கு! Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top