தன்னுடைய
அரசியல் வாழ்வுக்கும் நற்பெயருக்கும் ஊடகம் வாயிலாக களங்கம்
ஏற்படுத்தியமைக்காக சக்தி தொலைக்காட்சி, மத்தியமாகாண சபை உறுப்பினர்
சக்திவேல் மற்றும் ஸ்ரீரங்கா ஆகியோருக்கு எதிராக நஷ்ட ஈட்டு தொகையாக 2000
மில்லியன் ரூபா கோரியுள்ளதாக தொழிலாளர் தேசிய சங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தொழிலாளர் தேசிய சங்கம் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
கடந்த ஜுலை மாதம் 5ம் திகதி மகாராஜா கூட்டு நிறுவனத்தின் அங்கத்துவ
நிறுவனமான சக்தி தொலைக்காட்சியில் நடத்தப்படும் மின்னல் நிகழ்ச்சியில்
திட்டமிட்ட அடிப்படையில் தனது பெயருக்கும் அரசியல் வாழ்விற்கும் களங்கம்
ஏற்படும் வகையில் செயற்பட்டமை உலகெங்கும் பரவலாக இணையத்தளங்களில்
வெளியானது.
குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்
மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் அவர்களும் மின்னல் நிகழ்ச்சியில்
கலந்து கொண்டிருந்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பிரஜைகள் முன்னணியின் பொதுச்
செயலாளருமான ஸ்ரீரங்கா திட்டமிட்ட அடிப்படையில் கேள்விகளை தயார் செய்து
கொடுத்து அந்த கேள்விகளுக்கு விடைகளை முன்கூட்டியே தீர்மானித்து ஒளிபரப்பு
செய்தமை நேரடி தொலைகாட்சி நிகழ்ச்சியாக நடத்தப்படுவது போல் திட்டமிட்டு
ஒளிபரப்பு செய்து திகாம்பரத்துக்கு எதிரான கருத்துக்களை பரப்புரை செய்வதை
இணையத்தளங்கள் வெளியிட்டிருந்தன.
இந்த நடவடிக்கை மூலம் பல்லாயிரக்கணக்கான உறுப்பினர்களை கொண்ட தொழிலாளர்
தேசிய சங்கத்தின் தலைவர் என்ற வகையிலும் அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற
வகையிலும் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர் என்ற வகையிலும் தனது
பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளமையினால் அதற்கு எதிராக நஷ்டஈடாக 2000
மில்லியன் ரூபா தருமாறு கோரி சக்தி தொலைகாட்சி மின்னல் நிகழ்ச்சியின்
நடத்துனரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா மற்றும் அந்த
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கெதிரான கருத்துக்களை திட்டமிட்ட வகையில்
தெரிவித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்
சக்திவேல் ஆகியோருக்கு சட்டத்தரணியூடாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


0 comments:
Post a Comment