ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில்
போட்டியிட்டு தோல்வியடைந்த ஆறு பேருக்கு தேசியப் பட்டியல் நியமனம்
வழங்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
எஸ்.பி. திஸாநாயக்க, மஹிந்த சமரசிங்க, பியசேன கமகே, லக்ஷ்மன் யாபா
அபேவர்தன, விஜித் விஜயமுனி சொய்சா, நந்திமித்திர ஏக்கநாயக்க ஆகியோருக்கே
இவ்வாறு உறுப்புரிமை வழங்கப்படவுள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலர்
இவர்களுக்கு தேசியப் பட்டியல் உறுப்புரிமையை வழங்குமாறு ஜனாதிபதியிடம்
வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப்
பட்டியலில் மேலும் 6 பேர் நியமிக்கப்படவுள்ளனர்.

0 comments:
Post a Comment