• Latest News

    August 21, 2015

    ஐக்கிய தேசிய கட்சி, நயவஞ்சகம் செய்துவிட்டது : ஆசாத் சாலி

    ஆசாத் சாலிக்கு தேசியப் பட்டியலில் இடம்தருவதாக சொல்லிவிட்டு பின்னர் ஏமாற்றப்பட்டுள்ளதாக ஆசாத் சாலிக்கு நெருக்கமான வட்டாரங்கள் jaffna muslim இணையத்திற்கு தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பில் அந்த வட்டாரங்கள் மேலும் சொல்லியபோது:

    மகிந்தவை வீட்டுக்கு அனுப்பும் போராட்டத்திற்கு ஆசாத் சாலி பெரிதும் பங்காற்றியிருந்தார்.  இதை ரணிலோ அல்லது மைத்திரியோ மறந்திருக்கமாட்டார்கள். ஆசாத் சாலி கண்டியில் போட்டியிட தயாரானபோது அது தடுக்கப்பட்டது: ஆசாத் சாலிக்கு தேசியப் பட்டியல் தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்டது. இதனால் அவர் சுயேற்சையாக போட்டியிடுவதிலிருந்தும் தவிர்ந்துகொண்டார்.

    ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக உழைத்தார். இறுதியில் ஏமாற்றப்பட்டார்.

    நேற்று வியாழக்கிழமை பிந்நேரம் வரை ஆசாத் சாலியின் பெயர் தேசியப் பட்டியலில் இருந்துள்ளது. பின்னர் இறுதி நேரத்தில்தான் அவரது பெயர் நீக்கப்பட்டது. இதன்மூலம் ஆசாத் சாலிக்கு நயவஞ்சகத்தை ஐக்கிய தேசியக் கட்சி செய்துவிட்டதெனவும் அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன:
    jaffna muslim
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: ஐக்கிய தேசிய கட்சி, நயவஞ்சகம் செய்துவிட்டது : ஆசாத் சாலி Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top