• Latest News

    August 07, 2015

    என் நெஞ்சை பிளந்த மாணவியின் புத்தகப் பை 'அன்றும் - இன்றும்

    ( முஹம்மட் ஜெலீல் - நிந்தவூர் )
    பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த மாணவியின் புத்தகப் பை ஒன்றினை அவதானித்த போது என் நெஞ்சை பிளந்த சம்பவம்மொன்று அண்மையில் இடம்பெற்றதையடுத்து உடனே அம்மாணவியின் புத்தகப் பையை புகைப்படம் எடுத்து சில தனவந்தகர்களுக்கு அனுப்பியபோது அப்புத்தகப் பையின் நிலைமையை புகைப்படம் மூலம் பார்வையிட்ட வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் வாழும் கருணை உள்ளம்கொண்ட சகோதரர்கள் சிலர் உடனே அம்மாணவிக்கு உதவவேண்டுமென்ற நல் உள்ளத்தோடு சிலர் புத்தகப் பைகளை வாங்கிக் கொடுக்குமாறு என்னிடம் பணத்தொகையாகவும் இன்னும் சிலர் புத்தகப் பைகளையும் என்னிடம் கையளித்தார்கள்.

    மேலும் இவ்வுதவிகளை கொண்டு அங்கு கல்வி பயிலும் மிகவும் வறிய மாணவ மாணவிகளுக்கு புத்தகப் பை மற்றும் அவர்கள் கல்வி பயில்வதற்கான பாடசாலை உபகரணங்களும் நேற்று 06-08-2015 அன்று நிந்தவூர் 'செரிட்டி பவுண்டேசன்' அமைப்பின் உதவிமூலம் கொண்டுசென்று அம்மாணவ மாணவிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
     
    இந்த உதவிகளை வழங்கிய கருணை உள்ளம்கொண்ட சகோதரர்களுக்கு எமது நிந்தவூர் 'செரிட்டி பவுண்டேசன்' அமைப்பின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு உங்களது அமானிதம் நீங்கள் உதவ நினைத்த உள்ளங்களுக்கு உரிய முறையில் சரியான முறைப்படி பேய் சேர்ந்ததோடு உங்களுக்கான துஆக்களும் பிராத்தனைகளும் இடம்பெற்றள்ளதென்பதை எனது பிராத்தனையோடு தெரிவித்துக்கொள்கின்றேன்.





     
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: என் நெஞ்சை பிளந்த மாணவியின் புத்தகப் பை 'அன்றும் - இன்றும் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top