• Latest News

    August 16, 2015

    தேர்தலை குழப்புவோரை துப்பாக்கியால் சுடும் அளவிற்கு பொலிஸாருக்கு அதிகாரம்!- தேர்தல் ஆணையாளர்

    அமைதியானதும் நீதியானதுமான முறையில் தேர்தல் நடத்தப்படுவதனை சீர்குலைக்க முயற்சிக்கும் நபர்களை துப்பாக்கியால் சுடும் அளவிற்கு, பொலிஸாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
     
    அமைதியாக தேர்தல் நடத்தப்படுவதனை தடுக்க முயற்சிக்கும் எந்தவொருவரையும் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

    எவ்விதமான அச்சமும் சந்தேகமும் இன்றி தைரியமாக வாக்குச் சாவடிகளுக்கு சென்று வாக்களிக்கத் தேவையான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. 

    மக்கள் அமைதியான முறையில் வாக்களிப்பதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளன. 

    வாக்குச் சாவடிகளில் நாச வேலைகளில் ஈடுபட எவருக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது. 

    சட்டவிரோதமான செயற்பாடுகள் இடம்பெற்றால் குறித்த வாக்குச் சாவடியின் வாக்களிப்பினை சூன்யமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் திட்டவட்டமாக ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளார்.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: தேர்தலை குழப்புவோரை துப்பாக்கியால் சுடும் அளவிற்கு பொலிஸாருக்கு அதிகாரம்!- தேர்தல் ஆணையாளர் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top