• Latest News

    August 16, 2015

    அபூபக்கர் பக்தாதி எனப்படும், சிமோன் எலியட் (மயிர்கூச்சறியும் தகவல்கள்)

    ரவுப் செய்யின்-
    2014 ஜுன் 21 இல் ஈராக்கின் மௌசூல் நகர பள்ளிவாயல் மிம்பரில் ஏறி நின்று இஸ்லாமிய கிலாபத்தைப் பிரகடனம் அபூபக்கர் அல் பக்தாதி என்பவன் பற்றி உலகின் முன்னணி ஊடுருவி அறியும் ஊடகவியலாளர்கள் வெளியிட்டு வரும் புதிய தகவல்கள் ஐசிஸ் பயங்கரவாதத்தின் உண்மை முகத்தைத் தோலுரித்துள்ளது.  அறபு நாட்டுத் தலைவர்கள் கறுப்புப் பயங்கரவாதம் (Black Terrorism) என்று கண்டன அறிக்கை விட்டதோடு மௌனமாகியுள்ளனர். இந்த கறுப்புப் பயங்கரவாதத்தின் சூத்திரதாரிகள் தங்களது எஜமானர்களான அமெரிக்காவும் இஸ்ரேலும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளத் திராணியற்றவர்களா..?

    பிரான்ஸின் முன்னணி ஊடகமொன்று சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், ஐசிஸ் பயங்கரவாதத்தின் தலைவர் அபூபக்ர் பக்தாதி பற்றி மயிர்கூச்சறியும் பல தகவல்களை வெளிக்கொணர்ந்துள்ளது.  இஸ்ரேலின் யூத தாய்க்கும் தந்தைக்கும் பிறந்த அவன், ஆரம்பக் கல்வியை இஸ்ரேலிலேயே பெற்றான். பின்னர் அமெரிக்காவின் மத்திய உளவு நிறுவனமான cia யும் இஸ்ரேலின் உளவுப் பிரிவான மொஸாதும் இணைந்து அவனை ஈராக்கின் பக்தாத் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தது. அன்றுதான் ஐசிஸ் பயங்கரவாதத்தின் மூல விதை ஊன்றப்பட்டது.

    அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் இஸ் லாமிய உலகில் முஸ்லிம்களுக்கு இடையிலான மோதல்களைத் தீவிரப்படுத்துவதன் மூலம் பாரிய உளத் தாக்கமொன்றை உருவாக்குவதற்கு பக்தாதியை ஒரு கருவியாகப் பயன்படுத்தி வருகின்றன. அறபு மொழியை நன்கு கற்ற சிமோன், தனது பெயருக்குப் பின்னால் பக்தாதி என்ற அடைமொழியையும் இணைத்துக் கொண்டதன் மூலம் அறபு, முஸ்லிம் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொண்டான்.

    இவன் அமெரிக்காவில் சில காலம் வாழ்ந்ததாகவும், அப்போது சில திரைப்படங்களில் நடித்துள்ளதாகவும் பிரான்ஸின் இந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ் லாத்தின் பெயரால் உலகளாவிய வன்முறை அமைப்பொன்றை நிறுவுவதற்கு ஊதியம் பெறும் ஒரு ஏஜண்டாக சிமோன் எலியட்டை சியோனிஸவாதிகள் பயன்படுத்தி வருகின்றனர். அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் இடம்பெறும் ஜிஹாத் பற்றிய வசனங்களை அத்துப்படியாக உச்சாடனம் செய்யும் அளவு சிமோன் பயிற்றுவிக்கப்பட்டிருப்பதுதான் மிகவும் ஆச்சரியமானது.

    நியூயோர்கின் பன்றி இறைச்சிக் கடை யொன்றில் அவன் பணியாற்றியுள்ளதாகவும் மற்றொரு தகவல் தெரிவிக்கின்றது. இவன் பல்வேறு பெயர்களில் cia மற்றும் மொஸாத் வட்டாரங்களில் அறியப்படுகின்றான். அமீர் தாஷ் என்பது cia வட்டாரத்தில் இவனுக்குச் செல்லப்படும் பெயராகும். இப்றாஹிம் இப்னு அவாத் இப்னு இப்றா ஹீம் அல் பத்ரி சுருக்கமாக இப்றாஹீம் என்ற பெயரில் மொஸாத் வட்டாரங்களில் நன்கு அறியப்பட்டவன். சிமோன் எலியட்டை ஒரு முஸ்லிம் தாஈ போன்றும் போராளி போன்றும் உருவாக்குவதிலும் அவன் தலைமையில் ஒரு ஆயுத இயக்கத்தை ஸ்தாபிப்பதிலும் அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்களுக்கு பெரும்பங்கு உள்ளது. இந்நாடுகளின் புலனாய்வுப் பிரிவின் கூட்டுருவாக்கம் ஐசிஸ் எனும் பயங்கரவாத அணியாகும்.

    இப்பயங்கரவாத இயக்கத்தை இரகசியமாக உருவாக்குவதில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர் ஜோன் மெக்கைன் ஈடுபட்டிருந் தார் என்பதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஐமன் ஸவா ஹிரியின் தலைமையிலான அல் காயிதா அணியிலிருந்து பலரைப் பிரித்தெடுத்து இவனது தலைமையில் உருவாக்கப்பட்ட ஐசிஸ் அமைப்பு, அமெரிக்காவினதும் இஸ்ரேலின தும் சர்வதேச சதித் திட்டமாகும். மொஸாதும் cia யுயும் சிமோன் எலியட் என்ற யூதனின் தலைமையில் கறுப்புத் தலைப் பாகையுடன் கூடிய ஆயுததாரிகளைக் கொண்டு உருவாக்கிய இவ்வமைப்பு, பலவேறு நோக்கங்களுக்காகக் களமிறக்கப்பட்டுள்து. அமெரிக்காவின் உள்ளே செயல்படும் பல சுதந்திர ஊடகவியலாளர்கள் இநநோக்கங்களைப் பின்வருமாறு அடையாளப்படுத்துகின்றனர்.

    1. முழு இஸ்லாமிய உலகையும் நீடித்த போர் நிலைக்குள் தள்ளுவதன் மூலமும் இரத்தக்களரியை உருவாக்குவதன் மூலமும் முஸ்லிம்களின் உளவி யலை பலவீனப்படுத்துவது. 2. இஸ்ரேலின் ஆக்கிரமிப்பையும் விஸ்தரிப்புவாதத்தையும் பற்றிய உலகக் கவனத்தைத் திருப்புவது. 3. இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த ஒரு பயங்கரவாதப் பீதியை உலகமயமாக்கல். 4. அமெரிக்காவின் வெளிநாட்டுப் போர்கள் மற்றும் இராணுவத் தலையீடுகளை நியாயப்படுத்தல்.

    இஸ்ரேல், ஐக்கிய அமெரிக்கா மட்டுமன்றி, டேவிட் கெமரூனின் பிரிட்டிஷ் உளவாளிகளும் இப்பயங்கரவாத அமைப்பின் பின்னணியில் உள்ளனர். ஈராக்கின் அன்பார் மாகாணத்தில் புதிதாக நிலைகொண்டுள்ள ஐசிஸ் பயங்கரவாதிகளுக்கு பிரிட்டிஷ் வான் படையினர் ஆயுதங்களை தரையிறக்கும் காட்சி உலகின் முன்னணி ஊடுருவி அறியும் ஊடகவியலாளர்களின் கெமராக்களில் பதிவாகியுள்ளது. அதேபோன்று ஜோன் மெக்கைன் போன்ற உயர் அதிகாரிகளை சிடோன் எலியட் சந்திக்கும் காட்சிகளும் உலகப் பார்வைக்கு வந்துள்ளது.

    சூடான் ஜனாதிபதி உமர் பஸீர் குறிப்பிடுவது போன்று, அமெரிக்காவும் இஸ்ரேலுமே இப்பயங்கரவாத இயக்கத்தை உருவாக்கி வழிநடாத்துகின்றன. இது மிக நுணுக்கமான திட்டமிட்ட உருவாக்கமாகும். அவ் வியக்கத்தின் ஒவ்வொரு வன்முறையும் நுணுக்கமாகவும் தெளிவாகவும் பதிவு செய்யப்பட்டு, உலகின் முன்னணி ஊடகங்களில் ஒளிபரப்பப்படுகின்றது. இதுவே இவ்வியக்கத்தின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பதை நிறுவுவதற்குப போதுமானது என பிரபல உலகப் புகழ்பெற்ற ஊடகவியலாளர் வெய்னி மெட்சன் கூறுகிறார்.

    சிமோன் எலியட் என்ற யூதனே அபூபக்ர் பக்தாதியாகப் பயிற்றுவிக்கப்பட்டான். இது குறித்த அனைத்து நிரூபணங்களும் தன்னிடமுள்ளது என்று வாதிக்கின்றார் எட்வேர்ட் ஸ்னோடன். இவர் அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவகத்தின் முன்னாள் உயர் அதிகாரி. அமெரிக்கப் பாதுகாப்புப் பிரிவு இழைத்துவரும் அநியாயங்களைக் கண்டு தனக்கு ஏற்பட்ட மன உறுத்தலால் அதிலிருந்து விலகியவர்.

    ஐசிஸ் கறுப்புப் பயங்கரவாதம் மற்றும் அதன் தலைவர் சிமோன் எலியட் எனப்படும் பக்தாதி, அமெரிக்க இஸ்ரேலிய, பிரிட்டிஷ் அரசுகளின் கூட் டுத் தயாரிப்பே என்பதை நிறுவும் சில கேள்; விகள் கீழே தரப்படுகின்றன.

    1. சிரியாவில் அஸதின் சிஆ அரசுக்கு எதிராகப் போராடி அவர்களால் வெற்றி பெற முடி யாமல் போனதேன்? 2. தமக்குத் தொடர்பில்லாத ஆப்கானிஸ்தான் போன்ற பிராந்தியங்களில் ஊடுருவியிருப்பதேன்? 3. இதுவரை சியோனிஸ இஸ்ரேல் குறித்து ஒரு வார்த்தையேனும் பேசாமல் இருப்பதேன்? இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தாமல் இருப்பதேன்? 4. இஸ்ரேலின் எல்லைப் புறமாகவுள்ள சினாயில் இவர்கள் நிலைகொண்டிருப்பினும் இஸ்ரேல் அமைதியாக இருப்பதேன்? 5. இஹ்வான்களை விட ஐசிஸ் அவ்வளவு ஆபத்தானதல்ல என்று நெடன்யாஹு கூறியிருப்பதேன்? 6. அமைதியாக இருக்கும் அறபு நாடுகளிலும் ஊடுருவியுள்ள இவர்கள், 'சிஆ-சுன்னி முரண்பாட்டைத் தீவிரப்படுத்துவதேன்? 7. பிரிட்டிஷ் இராணுவம் இவர்களுக்கு ஆயுதங்களை விநியோகம செய்வதேன்? 8. ஐசிஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான உல கக் கூட்டணி ஒன்றை உருவாக்கிய அமெரிக்கா தாக்குதல் நடத்தி வந்த அதே கால கட்டத்தில் 18 நாடுகளில் எவ்வாறு அவர்களால் ஊடுருவ முடிந்தது? 9. ஐசிஸ் தீவிரவாதிகளிடமுள்ள பலமான ஆயுதங்கள் எங்கிருந்து வந்தன? 10. அறபு வசந்தம் இடம் பெற்ற நாடுகளை இவர்கள் குறிப்பாக இலக்கு வைப்பதேன்?

    இக்கேள்விகளுக்கான விடைகள் இப்போது உலகளவில் வெளிவந்து விட்டன. இப்பயங்கரவாத இயக்கமும் அதன் தலைவரும் அமெரிக்க, சியோனிஸ தயாரிப்பாகும் என்பது அப்பளுக்கற்றவிதத்தில் புலனாகியுள்ளது. முஸ்லிம்கள் எதிரிகளைக் கவனமாகப் புரிந்துகொள்ளல் வேண்டும்?

    6. யாஸ்மினா ஹைபா (நீதியமைசர் சிரேஷ்ட அதிகாரி, நெதர்லாந்து)

    ஐசிஸ் பயங்கரவாதத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையில் எந்த சம்பந்தமுமில்லை. அது தெளி வான சியோனிஸ் திட்டத்தின் ஒரு பகுதியே இஸ்லாத்தின் பெயரைக் களங்கப்படுத்த மேற்; கொள்ளப்படும் ஒரு சதித்திட்டமே இது. தனது டுவிட்டரில் இக்கருத்தை யாஸ்மினா பதிவேற்றியபோது நெதர்லாந்து பாராளுமன்றத்தில் இஸ்ரேல் ஆதரவு உறுப்பினர்கள் கிளர்ந்தனர். யாஸ்மினை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கூக்குரலிட்டனர். இதனால் யாஸ்மினாவின் குரல் அமைதியானது.

    7. அந்தோனி மெத்திவ் ஜhகொப் (இந்தியா வின் அரசியல், சமயப் பகுப்பாய்வாளர்)

    இந்த ஐசிஸ் பயங்கரவாதம் மேற்கு ஊடகங்கள் சொல்லது போல சிஆப் படையோ சுன்னிப்படையோ அல்ல. அவர்கள் கொரூரமான கொலையாளிகள். இஸ்ரேலினால் பயிற்றுவிக்கப்பட்டு, நிதி ஆதரவளிக்கப்பட்டு, போஷிக்கப்படும் இயக்கமாகும். 02.08.2014)

    8. டொனி காட்டலூசி (புவி அரசியல் ஆசூவாளர், தாய்லாந்து)

    ஐசிஸ் இஸ்ரேல், நேட்டோ, அமெரிக்கா என்பவற்றின் கூட்டுத் தயாரிப்பாகும். தீமைகளின் அச் சினால் வார்க்கப்பட்ட இவ்வியக்கம், இஸ்ரேலின் நலன்களுக்காகவே செயல்படுகின்றது. அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி எட்வேட் ஸ்னோடனும் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். ஐசிஸ், ஈராக்கின் முக்கிய நகரங்களைக் கைப்பற்றிய வேளை, டெல் அவிவ் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய நெடன்யா அமெரிக்கா ஈராக்கிய மோதலில் தலையிடக் கூடாது என்று வேண்டிக் கொண்டார்.

    இப்படி ஐசிஸ் கறுப்புப் பயரங்வாதம் ஒரு சியோனிஸத் தயாரிப்பு என்பதற்கான கட்சியங்கள் வலுவாக முன்வைக்கப் படுகின்றன. ஆயினும், அறபு நாட்டு அர்சுளும் ஆலிம்களும் தொட ராகக் காத்து வரும் மௌனத்தின் அர்த்தம் என்ன என்பது ஆச்சரியமான கேள்வியாககவே எழுகின்றது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: அபூபக்கர் பக்தாதி எனப்படும், சிமோன் எலியட் (மயிர்கூச்சறியும் தகவல்கள்) Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top