• Latest News

    August 13, 2015

    முன்மாதிரியான முட விஞ்ஞாபனம்

    திகாமடுள்ள மாவட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 10ம் இலக்க வேட்பாளர் கலாநிதி இஸ்மாயில் அவர்கள் தேர்தல் விஞ்ஞாபனம் ஒன்றினை வெளியிட்டு அம்பாறை மாவட்டத்தில் எந்த அரசியல் வாதியும் செய்யாத ஒரு முன் மாதிரி வேலையினைச் செய்துள்ளார்.இதன் வெளியீட்டின் இறுதியில் “தான் தனது குறிக்கப்பட்ட கால எல்லையில் இவைகளினைச் செய்யாத போது நான் மீண்டும் உங்களிடம் வாக்குக் கேட்டு வந்தால் வாக்களிக்க வேண்டாம்” எனவும் கூறியுள்ளார்.உண்மையில் இவரின்  இச் செயற்பாடு பாராட்டத்தக்கது,இவ் முன் மாதிரியினை ஏனைய அரசியல் வாதிகளும் கடைபிடிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை.

    எனினும்,இவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை பூரண ஆரோக்கியம் கொண்ட ஒரு விஞ்ஞாபனமாக பார்க்க முடியாது.ஒரு தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படைப் பண்பு “வரையறுக்கப்பட்ட திட்டத்தினை அது கொண்டிருக்க வேண்டும்”.வரையறுக்கப்படாத திட்டங்களினை கூறும் போது அதனை குறித்த நபர் செய்தாரா? செய்ய வில்லையா? என்பதனை மட்டிட முடியாது.மட்டிட இயலாத போது குறித்த நபரிடம் வினா எழுப்ப முடியாது.இவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் ஒரு வரையறுக்கப்பட்ட திட்டம் கூட இல்லை.

    எனது கருத்தினை தெளிவாக விளங்க அக் குறித்த விஞ்ஞாபனத்தில் உள்ள மிகச் சிறிய தலைப்பினைக் கொண்ட விஞ்ஞாபனத்தினை எடுத்து ஆராய்வோம்

    சுத்தமான குடிநீர்

    எமது பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்கள் சுத்தமான குடிநீர் வசதி இன்றி பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.இந்நிலையினை போக்குவதற்கான மக்கள் ஆணையினை கோரி நிற்கிறேன்.மக்கள் ஆணையின் மூலம் இப் பிரதேசத்தில் வாழும் அனைவருக்கும் சுத்தமான குடி நீரினைப் பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளும் என்னால் மேற்கொள்ளப்படும்.

    இதில் ஏதேனும் திட்டம் உள்ளதா? தான் வென்றால் என்ன செய்வேன் ? என்ற தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தனக்கு ஆணையினைத் தருமாறு கோரியுள்ளார்.இவ் ஆணை கோரல் தேர்தல் விஞ்ஞாபனம் அடிப்படைப் பண்பினைக் கூட இவர்கள் அணி அறிய வில்லை என்பதனை தெளிவாக காட்டுகிறது.உண்மையில் ஒரு விஞ்ஞாபனம் “தான் இந்த இந்த திட்டங்களினை செய்வதன் மூலம் இவ்வாறு இப் பிரச்சினைக்கு தீர்வினை வழங்குவேன்”.என்ற வகையில் அமைதல் வேண்டும்.

    இவர் அம்பாறை மாவட்டத்தினை மையமாக கொண்டு தேர்தல் கேட்பதால் இவரின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை முழு மாவட்டத்திற்குமான ஒரு தேர்தல் விஞ்ஞாபனமாக பார்க்கலாம். இவர் பாராளுமன்றம் தெரிவாகி இவரது  பாராளுமன்ற பதவிக் காலம் முடிவுறும் காலப்பகுதியினுள் அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைவரிற்கும் சுத்த மான குடி நீரினை வழங்குவது சாத்தியமற்றது.இதன் பிற் பாடு வரும் தேர்தலில் இவர் வாக்கு கேட்டு வரும் போது “நீங்கள் அனைவரிற்கும் வழங்குவதாக கூறினீர்களே! இவர் சுத்தமான குடி நீரினை பெற வில்லையே!” எனக் கேட்கும் போது ஒரு மிடர் சுத்தமான தண்ணீரினை வழங்கி விட்டு நான் அனைவரிற்கும் சுத்தமான தண்ணீர் வழங்கி விட்டேன் எனக் கூறியும் தப்பித்துக் கொள்ளலாம்.

    இத் திட்டத்தினைச் செய்யாவிட்டால் எவ்வாறு இவரிடம் கேள்வி கேட்க முடியும்?

    இவைகளினை நன்கு சிந்திக்கும் ஒருவர் இவரின் தேர்தல் விஞ்ஞாபனம் பூரண ஆரோக்கியம் கொண்டதல்ல என்பதனை விளங்கி கொள்வர்.நான் மேலே உதாரணம் காட்டியுள்ளது போன்றே ஏனைய அனைத்து விடயங்களும் உள்ளன.

    துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
    சம்மாந்துறை.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: முன்மாதிரியான முட விஞ்ஞாபனம் Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top