• Latest News

    August 13, 2015

    போலியான வழக்குத் தாக்குதலை மேற்கொண்டு மு.காவின் தலைவர் மூக்குடைந்துள்ளார்:

    யு.கே.காலிதீன்-
    வாக்காளர்களை குழப்புவதற்காக போலியான வழக்குத் தாக்குதலை மேற்கொண்டு மு.காவின் தலைவர் மூக்குடைந்துள்ளார். இவர்கள் மக்களை குழப்பத்தில் ஆழ்த்தியே அரசியல் செய்து வந்துள்ளார்கள்.

    இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் வேட்பாளர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தேர்தலில் போட்டியிடுவதற்கு முறையான அனுமதியைப் பெற்றுக் கொள்ளவில்லை என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட ரீட்மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததனை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

    சாய்ந்தமருதில் உள்ள அவரது காரியாலயத்தில் நடைபெற்ற இச்செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

    வேட்பாளர் இஸ்மாயில் பாராளுமன்றம் சென்றால் தனது செவியை அறுப்பேன் என்று சவால்விட்ட மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம், தற்போது நீதிமன்றத்தின் தீர்ப்பு அவரது சதிக்கு மாறாக அமைந்துள்ளது. இவ்வாறு சவால்விட்ட அவர் தான் ஒரு தலைவர் என்று காட்டுவதற்காக தமது அமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்வாரா என்று கேட்கின்றேன். அதே போன்று இந்த வழக்கை நடாத்திய சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இன்னும் மூன்று மாத காலங்கள்தான் உள்ள மேயர் பதவியை இராஜினாமாச் செய்யவாரா என்று கேட்கின்றேன்.

    இன்று அம்பாரை மாவட்டத்தில் உள்ள களநிலவரப்படி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சுமார் 50ஆயிரம் வாக்குகளைப் பெற்றுக் கொள்ளும் என்பது உறுதியாகியுள்ளது.

    வேட்பாளர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில்

    இச்செய்தியாளர் மாநாட்டில் வேட்பாளர் எஸ்.எம்.எம்.இஸ்மாயில் கருத்துத் தெரிவிக்கையில், மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம் சம்மாந்துறை மக்களையும், அம்பாரை மாவட்டத்தில் உள்ள எமது கட்சியின் ஆதரவாளர்களையும் சங்கடத்திற்குள் உட்படுத்தி எம்மை தோல்வியடையச் செய்ய வேண்டுமென்பதற்காக தொடுக்கப்பட்ட வழக்கு, இன்று போலியானது என்பது நிருபனமாகியுள்ளது.

    அவர்கள் ஒவ்வொரு தேர்தல் காலங்களிலும் இவ்வாறான குழப்பங்களை மக்கள் மத்தியில் உருவாக்கித்தான் அரசியல் இலாபமடைந்துள்ளார்கள். இதனை இத்தேர்தலிலும் செய்து அரசியல் இலாபமடைந்து கொள்வதற்கு எத்தனித்துள்ளார்.

    நூன் வெற்றி பெற்றாலும் பாராளுமன்றத்தின் கதிரையில் அமரவிட மாட்டேன் என்று சவால்விட்டுள்ளதனை வைத்துப் பார்க்கும் போது, எனக்கு கொலை அச்சுறுத்தல் கூட விடுக்கலாமென்று சந்தேகிக்க வேண்டியுள்ளது.

    மு.காவினர் என் மீது போட்ட போலியான வழக்கிற்காக ரூபா 500 மில்லியன் நஸ்டஈடு கோரி வழக்கு தாக்கல் செய்வதற்க ஏனுத சட்டத்தரணிகளுடன் பேசிக் கொண்டிருக்கின்றேன். விரைவில் அந்த வழக்கை தாக்கல் செய்வேன்.

    மேலும், ரவூப் ஹக்கீம் மேற்கொண்ட இந்நடவடிக்கை எனக்கான மக்கள் ஆதரவை அதிகரிக்கச் செய்துள்ளது.
    • Blogger Comments
    • Facebook Comments

    0 comments:

    Post a Comment

    Item Reviewed: போலியான வழக்குத் தாக்குதலை மேற்கொண்டு மு.காவின் தலைவர் மூக்குடைந்துள்ளார்: Rating: 5 Reviewed By: murasunews
    Scroll to Top