(எம்.எம்.ஜபீர்)
முஸ்லிம்களின் சமய வழிபாடுகளுக்கு தடைகளை
ஏற்படுத்திய மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்காக கடந்த ஜனாதிபதி தேர்தலில் முழு
மூச்சாக இருந்து உழைத்தவர்தான் இன்று மயில் சின்னத்தில் சம்மாந்துறையில்
களம் இறங்கியுள்ளார்.
இவ்வாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
சார்பில் அம்பாரை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து
சம்மாந்துறை பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் நேற்று
இரவு கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட
உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹீர் தெரிவித்தார்.
ஆவர் அங்கு தொடர்ந்து
உரையாற்றுகையில் மறைந்த மாமனிதர் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களினால்
உருவாக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்த முஸ்லிம் கலாச்சாரத்தை
சீரழித்து சிங்கள கலாச்சாரத்தை தேற்றுவித்தவரும் இந்த மயில்காரரே. செனட்
சபையில் இருந்த அங்கத்தவர்களை 09 பேரில் இன்று 06 பேர் பெரும்பான்மை சிங்கள
சகோதரர்கள் இதற்கு காரணமாக இருந்தவரும் சம்மாந்ததுறை மயில் சின்னத்தில்
வந்துள்ள தான் படித்தவர் என்று கூறிமார்தட்டிக்கொள்ளும் வேட்பாளர் தான்.
ஒரு உயர்ந்த பதவியில் இருக்கின்ற போது மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல்
தனக்கு கிடைத்த அமானிதத்தை நீதிக்கும் நேர்மைக்கும் அடிபணிந்து நடக்க
வேண்டியவர்கள் இன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் விசாரணைக்கு இருக்கின்றார்.
எனவே இப்படிப்பட்டவர்களிடம் எமது எதிர்காலத்தினை ஒப்படைக்கலாமா?
தப்பித்தவறி அவர் வென்று பாராளுமன்றத்தில் இருக்கிறபோது கூட எம்.பி என்று
பார்க்காமல் குற்றச்சாட்டு நிறுபிக்கப்படுமானால் கைது செய்யப்படுவார்.
அப்போது சம்மாந்துறையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் ஊழல்
குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார் என்றால் அது எமது ஊரின் அவமானம். எனவே
ஊரின் மானத்தினை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸையே ஆதரிக்க வேண்டும் எங்களுடைய கட்சி தலைவருக்கு எதிராக
இதுவரைக்கும் எந்த ஒரு கூற்றச்சாட்டும் இழஞ்ச ஊழல் ஆணைக்குழவில்
முன்வைக்கப்படவில்லை இந்த மயில் சின்ன வேட்பாளருக்கு எதிராக கிட்டத்தட்ட
250ற்கு மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் அங்கே கடமையாற்றுகின்ற
விரிவுரையாளர்களினால் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அவருடைய கட்சி தலைவர் தான் அகதி முகாமில் இருந்து வந்தவர் நான் ஒரு அகதி
என்று சொன்னவர் இன்று கோடிக்கணக்கான சொத்திற்கு, 1000 கணக்கான காணிக்கு
சொந்தக்காரர். கட்சி தலைவரும் அப்படிப்பட்டவர் அந்த கட்சியில் களம் இறங்கி
இருக்கின்ற வேட்பாளர்களும் அப்படிப்பட்டவர்கள் எனவே நன்றாக சிந்தியுங்கள்
இப்படிப்பட்ட கும்பலுக்கெல்லாம் இடமளிக்காதீர்கள்.
தலைவர்
மரணித்தாலும் அழியாத இயக்கமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை கட்டிக்காப்பது
நாம் எல்லோருடைய கடமைஇ பாதுகாப்பு, வருங்கால சந்ததிகளின் எதிர்காலம்
எல்லாம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் தங்கியுள்ளது.
2010
ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் மன்சூர்
தோல்வியை தழுவினர் அது அவருக்கு நீங்கள் வழங்கிய ஒரு தண்டனை என நினைத்துக்
கொள்ள கூடாது அவர் வெற்றி பெறவில்லை என்று நீங்கள் சந்தோசப்பட்டிருக்கலாம்.
அனால் தோற்றது சம்மாந்துறை மக்கள் தான். இந்த சந்தர்ப்பத்தினை நாம்
தவறவிட்டால் அல்லது எங்களுடைய வஞ்சகத்தை தீர்ப்பதற்காக பயன்படுத்தினால்
சம்மாந்துறை மக்கள் இன்னும் 6 வருடங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத
நிலைமை ஏற்படும் என மேலும் தெரிவித்தார்.

0 comments:
Post a Comment